பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்! கார்கில் சென்ற பிரதமர் மோடி! தொடரும் 9வது ஆண்டு!
டெல்லி: கார்கிலில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
கடந்த 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கார்கிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
கடந்த 2014ஆம் பிரதமராக முதல்முறை பொறுப்பேற்றது முதல் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் 2014ஆம் ஆண்டு சியாச்சினிலும், 2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அதேபோல் 2016ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசம் எல்லைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடினார்.

ராணுவ வீரர்களுடன்
இதேபோல் 2017ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையிலும், 2018ஆம் ஆண்டு உத்தரகாண்டிலும் ராணுவ வீரரகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2019ஆம் ஆண்டுமத்தியில் 2வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து 2வது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி அந்தாண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.

9 ஆண்டுகளாக
2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையிலும், 2021ஆம் ஆண்டு ரஜவுரியிலும் பாதுகாப்பு படை வீரரகள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த பிரதமர் மோடி இந்தாண்டு கார்கிலில் கொண்டாடியுள்ளார். இப்படியாக 2014ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் வரையிலான 9 ஆண்டுகளும் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தி கவுரவிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டுகிறார் பிரதமர் மோடி.

மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்
பிரதமர் மோடி வருகையையொட்டி லடாக் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும் எனக் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications