ஃப்ரீ ஹேண்ட்.. சிக்னல் தந்த மோடி.. பதுங்கும் பாகிஸ்தான்.. மொத்தமாக போகஸை திருப்பிய அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே நிலைமை மோசமாகி உள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

PM Modi gives freehand to Indian army USA is closely watching the developments against Pakistan

மோடி தந்த பவர்

தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.

இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

அமெரிக்கா மெசேஜ்

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலைமை மோசமாகி உள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஆலோசனைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. தற்போது நிலவுவது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் குறித்து அமெரிக்கா இதுவரை நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நிலைமையை மோசமாகாமல் காக்க வேண்டும் என்று இரு அரசாங்கங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள். இரண்டு நாடுகளின் கைகளின் அணு ஆயுதம் இருப்பதை விட அவை அருகருகே இருக்கும் நாடுகள். அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்., என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+