Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறுதியாக.. மோடி மௌனம் கலைந்தார்.. காலிஸ்தானி பன்னுவை அமெரிக்காவில் கொல்ல சதியா? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காலிஸ்தானி தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்காவில் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கனடா நாட்டை சேர்ந்த காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இது இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கனடாவில் இயங்கி காலிஸ்தான் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்ட தொடங்கியது. குறிப்பாக காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவின் இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக கடந்த செப்டம்பர் மாதம் என்.ஐ.ஏ. அறிவித்தது.

PM Modi has react on conspiracy to kill Khalistani leader Gurupadwant Singh Pannu in USA

குர்பத்வந்த் சிங் பன்னு எஸ்.எஃப்.ஜே. எனப்படும் சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் தலைவரான இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பன்னுவுக்கு எதிராக 3 தேசதுரோக வழக்குகள் உட்பட 22 குற்ற வழக்குகள் உள்ளன. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்திய தூதர் வெர்மாதான் காரணம் என அப்போது குர்பத்வந்த் சிங் பன்னு குற்றம்சாட்டி இருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேவில் காலிஸ்தான் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் பன்னு அறிவித்து இருந்தார்.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய 2 நாடுகள் குடியுரிமை வைத்து இருக்கும் பன்னுவை அமெரிக்காவில் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக பினான்ஷியல் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமெரிக்க அரசும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இது தொடர்பாக 52 வயதான நிகில் குப்தா என்பவரை கைது செய்தது அமெரிக்க காவல் துறை. பன்னுவை கொல்வதற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை கொலையாளிக்கு வழங்க முன்வந்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தது.

இந்த நிலையலி், பினான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு பிரதமர் மோடி அளித்து உள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது, "யாராவது எங்களுக்கு தகவல் தெரிவித்தால் அது குறித்து விசாரிப்போம். நமது குடிமகன் நல்லதோ அல்லது தீங்கோ செய்து இருந்தால் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்வோம். வெளிநாடுகளில் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு வேதனை தருகிறது. இதுபோன்றவர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மிரட்டல்களை விடுத்து வன்முறையை தூண்டுகிறார்கள்.

இந்தியா - அமெரிக்கா இடையே வலுவான உறவு உள்ளது. முதிர்ச்சியான, நிலையான கூட்டணி இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வருகிறது. பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது எங்கள் இரு நாடுகளின் உறவில் முக்கிய அங்கமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை இந்தியா - அமெரிக்கா இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவுடன் தொடர்புபடுத்துவது சரியல்ல." என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+