“ராகுலும், தேஜஸ்வியும்.. இந்தியாவின் ஊழல் நிறைந்த குடும்பங்களின் இளவரசர்கள்!” - பிரதமர் மோடி
டெல்லி: ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் இந்தியாவின் ஊழல் நிறைந்த குடும்பங்கள் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார். பீகார் தேர்தல் பிரச்சார களத்தில் இந்த விமர்சனத்தை பிரதமர் அடுக்கியிருக்கிறார்.
பீகாரின் முசாபர்பூரில் இன்று பேரணி நடைபெற்றது. பிரதமர் இப்பேரணியில் பங்கேற்று என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டினார்.

இப்பேரணியில் மோடி பேசியதாவது, "பீகார் தேர்தல் களத்தில், தங்களை இளவரசர்கள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பீகாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இவர்கள் இருவரும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த இவர்கள், சாதாரண பின்னணியில் இருந்து வந்து, உயர்ந்த ஒருவரை விமர்சிப்பது இயல்பானது.
இவர்கள் என்னை மட்டுமல்ல எல்லா சாமானியர்களும் விமர்சிக்கிறார்கள். சாமானியர்களை இழிவுபடுத்தாமல் ஒருபோதும் உணவு உட்கொள்ள மாட்டார்கள். தலித்துகளையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இழிவுபடுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதுகிறார்கள். ஒரு ஏழை, பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த ஒரு டீக்கடைக்காரர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னை விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிக்கள் ஒருநாள் முழுவதும் எடுத்துக்கொள்கின்றன. இவர்கள் பொய் வாக்குறுதிகளின் கடையை நடத்தி வருகிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்த ராகுல் காந்தி, "மோடி வாக்குகள் பெறுவதற்காக தேவைப்பட்டால் மேடையில் நடனம் கூட ஆடுவார்" என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியைதான் மோடி இன்று கொடுத்திருப்பதாக பேசப்படுகிறது.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இக்கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆனால் நிதிஷ்குமார்தான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக இதுவரை சொல்லவில்லை. மாறாக, வெற்றி பெற்றவுடன் முதல்வரை அறிவிப்போம் என்று மழுப்பி வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் ஷிண்டேவுக்கும் நேர்ந்ததுதான் நிதஷ்குமாருக்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் இப்படியொரு பிரச்சனை எனில், மறுபுறம் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்காமல் நட்பு போட்டி என்று கதை சொல்லி, கூட்டணியில் உள்ள கட்சிகளே சில தொகுதிகளில் எதிரெதிராக போட்டியில் இறங்கியிருக்கின்றன. அதேபோல, தேஜஸ்வி யாதவ்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதிலும் காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது. தற்போது தேஜஸ்வியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டாலும், இது மிகவும் தாமதமான அரசியல் நகர்வு என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. முன்கூட்டியே இந்த தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்திருந்தால் இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நவ.6ம் தேதியும் இரண்டாம் கட்டமாக நவ.11ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நவ.14ம் தேதியும் நடைபெறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications