டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெளிவாகத் தெரிகிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: அராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர் - வேண்டாதவர் பாகுபாடு போன்றவற்றை இளைஞர்கள் விரும்புவதில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். அதற்கு தமிழில் மனதின் குரல் என்றால் இந்தியில் 'மன் கி பாத்' என்று அழைக்கப்படுகிறது.

அப்படி தான் 'மன் கி பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

நமீதாவுக்கு நோ... ராதாரவிக்கு நோ... பாஜகவுக்காக கவுதமி களமிறங்கிய பின்னணி நமீதாவுக்கு நோ... ராதாரவிக்கு நோ... பாஜகவுக்காக கவுதமி களமிறங்கிய பின்னணி

ஒழுங்கான அமைப்பு

ஒழுங்கான அமைப்பு

அப்போது அவர் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர்; இளமைக்கால பயன்பாட்டை நம்பியே ஒருவரின் எதிர்காலம், வாழ்க்கை ஆகியவை உள்ளது.

பங்களிப்பார்கள்

பங்களிப்பார்கள்

நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்க 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமாக பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர்கள்

கல்வி நிலையங்களில் படிப்பை நிறைவு செய்த பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது சுகமான அனுபவம். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிலையங்களில் நூலகம் போன்றவற்றை அமைத்து தரலாம்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

பொதுமக்கள் முடிந்தவரை உள்ளூரில் தயாரித்த பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நினைவிடத்தை பார்வையிட வேண்டும் என இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பார்க்க முடியவில்லை

பார்க்க முடியவில்லை

நாட்டிலுள்ள அனைவரையும் போலவே, நானும் டிசம்பர் 26 அன்று சூரிய கிரகணத்தைப் பார்க்க விரும்பினேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக டெல்லியில் மேகங்கள் காரணமாக அது தெரியவில்லை. இருப்பினும், கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலிருந்து சூரிய கிரகணத்தின் அழகான படங்களை காண முடிந்தது" என்றார்.

English summary
PM Modi in Mann Ki Baat: In the coming decade, young India will play a key role. Today's youth believes in the system and also has an opinion on a wide range of issues. I consider this to be a great thing. What today's youth dislikes is instability, chaos, nepotism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X