"ஒரே ஆண்டில்.. ஐடி துறையில் 27 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.." பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இப்போது ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து வருகிறார்.
முன்னதாக நேற்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றிய நிலையில், பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.

வாஜ்பாய் கவிதை
கொரோனா பெருந்தொற்றை இந்திய மிகச் சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், வாஜ்பாயின் கவிதையையும் பிரதமர் மோடி மாநிலங்களவையில் வாசித்துக் காட்டினார். வாஜ்பாயின் கவிதை இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

விவசாயிகள்
தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள் முதல் முறையாகக் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுகின்றனர். இதன் மூலம் விவசாயத் துறையில் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க முடிந்தது. இதன் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினரின் சிறப்பான பங்களிப்பு காரணமாக, இந்தியா இப்போது மொபைல் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.

27 லட்சம் வேலைவாய்ப்புகள்
இப்போது பாதுகாப்புத் துறையிலும் கூட MSME நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பைத் தருகிறது. ரூ 200 கோடி வரையிலான திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே டெண்டர் விடப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் பணியமர்த்தல் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஐடி துறையில் 27 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மட்டும் அதிக அளவிலான யூனிகார்ன்கள் உருவாக்கப்பட்டன.

பணவீக்கம்
40 ஆண்டுகளில் இல்லாத மோசமான பணவீக்கத்தை அமெரிக்கா சந்தித்து வருகிறது. இங்கிலாந்து 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான பணவீக்கத்தை எதிர்கொள்கிறது. பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால் இந்தியாவில், 4% முதல் 5%க்குள் பணவீக்கத்தை வைத்துள்ளோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டது. இப்போது அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்தைக் கொண்ட ஒரே பெரிய நாடு இந்தியா தான்.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications