ஹாய் ப்ரோ.. மோடி எனக்கு அண்ணன் மாதிரி.. நான் அவருக்கு தம்பி.. சவுதி சல்மான் பாசமழை!
பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ராணுவம் முதல் பாதுகாப்பு வரை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார். நேற்று இரவுதான் அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் சல்மானுக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நட்பு
சல்மான் தனது பேச்சில், இந்தியாவும் சவுதியும் வரலாறு முழுக்க நெருக்கமாக இருந்த நாடுகள். பல நாடுகள் உருவாகும் முன்பே நாம் நட்பு நாடுகள். இந்திய மக்கள் எங்களுக்கு எப்போதும் நண்பர்கள். சவுதியை உருவாக்குவதில் இந்தியா கடந்த 70 வருடமாக பாடுபட்டு இருக்கிறது.

நிறைய உதவிகள்
சவுதியும் இந்தியாவிற்காக நிறைய பணிகளை செய்து இருக்கிறது. இந்தியா சவுதி இடையிலான உறவு எப்போதும் போல தொடர வேண்டும். இரண்டு நாடுகளின் நன்மைக்காகவும், பலனுக்காகவும் இரண்டு நாடுகளும் எப்போதும் நட்புடன் இருக்க வேண்டும்.

ஒப்பந்தம்
பிரதமர் மோடி, மற்றும் என்னுடைய தலைமையின் கீழ் இந்தியா சவுதி உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் மிக முக்கியமான நாடுகளாக இரண்டு நாடுகளும் வளரும். நாம் செய்யும் ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும்.

அண்ணன்
பிரதமர் மோடியின் பணிகளை நான் போற்றுகிறேன். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். நான் அவருக்கு தம்பி போன்றவர், எங்களின் நட்பு மிக மிக வலிமையானது என்று சல்மான் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications