75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கி நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

PM Modi to launch 75 digital banking units across 75 districts today

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என 2022-23- மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். டிஜிட்டல் வங்கி சேவையின் பயன்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இதில் பங்கேற்றுள்ளன.

சேமிப்பு கணக்குகளை துவக்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வது, நிதி மாற்றம், வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள், காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் வசதியான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கும். டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், டிஜிட்டல் நிதி அறிவை பரப்பி இணையவெளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி பாதுகாக்கும். டிஜிட்டல் வங்கி அலகுகள் வழங்கும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு நிகழ் நேர உதவி வழங்க போதுமான டிஜிட்டல் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகளில் 2 ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகர் லால் சவுக்கில் ஒன்றும் ஜம்முவில் மற்றொன்று ஜம்முவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+