Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே ஊழியருக்கு தீபாவளி போனஸ், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாட்கள் ஊதியம் வழங்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ22,000 கோடி மானியம் வழங்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று நடைபெற்றது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள்: வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்து, இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவு தந்து தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர இந்த ஒப்புதல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும். ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகிய பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

ரூ22,000 கோடி மானியம்

ரூ22,000 கோடி மானியம்

2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சமையல் எரிவாயு விலை வாடிக்கையாளர்களுக்கு அந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை. மாறாக இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் அத்தியாவசியமான சமையல் எரிவாயு விநியோகத்தை 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. 3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது என்ற பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் யோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

78 நாட்கள் ஊதியம் போனஸ்

78 நாட்கள் ஊதியம் போனஸ்

ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் பூஜை விடுமுறை நாட்களுக்கு முன் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டும் 11.27 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகை வழங்கப்பட்டது. தண்டவாள பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் வண்டி பாதுகாப்பாளர்கள் (கார்டுகள்), நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சமிக்ஞை இயக்குவோர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் சி-பிரிவு ஊழியர்கள் போன்றோருக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.1,832.09 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 க்கு பிந்தைய சவால்களால் சிக்கலான நிதிநிலைமை ஏற்பட்டபோதும், இந்த போனஸ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

 வடகிழக்கு மேம்பாடு

வடகிழக்கு மேம்பாடு

2022-23 முதல் 2025-26 வரையிலான 15 ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு "பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி" என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் ளித்துள்ளது. 100 சதவீதம் மத்திய அரசின் நிதியிலான இந்த புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும். இந்த நான்காண்டு காலத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.6600 கோடியாக இருக்கும்.2025-26-க்குள் திட்டங்களை நிறைவு செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதால், இதற்குப் பிறகு முடிக்க வேண்டிய பணிகள் இருக்காது. இதற்கான நிதி ஒதுக்கீடு தொடக்கத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் அனுமதிக்கப்படும். செலவினம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகள் வரை தொடரும். இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

ஏற்றுமதி – இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளம்

ஏற்றுமதி – இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளம்

அரசு - தனியார் - பங்கேற்பு முறையின் கீழ், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் அடிப்படையில் காண்ட்லாவின் கட்ச் வளைகுடாவில் உள்ள துனா - தெக்ராவுக்கு அப்பால் பன்னோக்கு சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளத்தை மேம்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த செலவு ரூ.2250.64 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவில் பன்னோக்கு சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளத்தின் மேம்பாட்டுக்கான ரூ.1719.22 கோடி செலவை சலுகை உரிமையாளர் ஏற்றுக்கொள்வார். நங்கூரமிடும் தளத்திற்கு இருபக்கங்களிலும் தூர்வாருதல், திருப்புவதற்கான வட்டப் பகுதிகள் அமைத்தல், அணுகு பாதையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக பயன்படுத்துவதற்கான வழி மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு ரூ.531.42 கோடி செலவை சலுகை உரிமையாளர் ஆணையம் (தீன்தயாள் துறைமுக ஆணையம்) ஏற்கும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது 2026 -ல் சரக்கு போக்குவரத்து 2.85 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும். 2030-க்குள் இதன் அளவு 27.49 ஆண்டுக்கு மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+