காமன்வெல்த் போட்டிகளில் கூட ஊழல் செய்து இந்தியா மதிப்பை கெடுத்தவர்கள்தானே.. மோடி ஆக்ரோஷ அட்டாக்
ஆணவத்தில் குடித்துவிட்டு தனக்கு மட்டுமே அறிவு உள்ளதாக நினைப்பவர்கள் பொய்யான பழிகளை பேசி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் மூலம் நம் நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை உலகிற்கு காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்த போதிலும், ஊழலின் காரணமாக இந்தியா பிரபலமின்றி போனதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின்போது நேற்று எதிர்க்கட்சிகள் உரையாற்றின. அப்போது ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து பேசினர்.

காமென்வெல்த் போட்டிகள்
இந்த நிலையில் இன்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகிற்கு காட்டுவதற்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஆனால், ஊழலின் காரணமாக இந்தியா பிரபலமின்றி போனது.

காங்கிரஸ் ஆட்சிகாலம்
2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகள் என்பது தோல்வியடைந்த காலமாக அறியப்படுகிறது. அதே நேரம் 2030களின் 10 ஆண்டு காலம் இந்தியாவின் காலமாக இருக்கும் என்பதை நம்மால் மறுக்க முடியாது. கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒவ்வொரு வாய்ப்புகளும் சிக்கல்களாக மாற்றப்பட்டதே காங்கிரஸ் ஆட்சியின் முத்திரை.

ஆணவத்தில் குடித்துவிட்டு பேசுபவர்கள்
ஆணவத்தில் குடித்துவிட்டு தனக்கு மட்டுமே அறிவு உள்ளதாக நினைப்பவர்கள், மோடி மீது பொய்யான, அறிவற்ற பழிகளை பூசி, தவறாக பேசினால் வழிகிடைக்கும் என்று நினைக்கிறார்கள். சிலர் விரக்தியில் மூழ்கி, நம் நாட்டுடைய முன்னேற்றத்தையும் ஏற்க மனமின்றி தவித்து வருகிறார்கள். அவர்கள் நம் நாட்டு மக்களின் சாதனைகளை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

140 கோடி மக்களின் உழைப்பு
140 கோடி மக்களுடைய உழைப்பின் பயனாக இந்தியாவுக்கு பெயர் கிடைக்கிறது. இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவிலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்தோம். அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்தோம்.

கொரோனா உதவி
இன்று உலகின் பல நாடுகள் இந்தியாவை பாராட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியா கொரோனா காலத்தில் சுமார் 150 நாடுகளுக்கு சர்வதேச நிறுவனங்களின் மூலமாக உதவியது. நம் நாட்டை வாக்கு வங்கி அரசியல் பாதித்தது. அதன் காரணமாகவே இந்தியாவின் வளர்ச்சியும் தாமதமானது. நடுத்தர மக்களை ஒதுக்கப்பட்டார்கள்.

நம்பிக்கையே எனக்கு பாதுகாப்பு
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. இந்திய ராணுவம் தன்னுடைய துணிச்சலான செயல்பாட்டை காட்டினால் அவர்கள் அதை விமர்சிக்கின்றார்கள். ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டால் அவர்களை தாக்குகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனக்கான பாதுகாப்பு கவசம். அந்த பாதுகாப்பை உங்களின் தவறான குற்றச்சாட்டுக்களால் ஒருபோதும் தகர்க்க முடியாது.

காங்கிரஸின் தோல்வி
செய்தித் தாள்களில் வரும் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சிகளில் வரும் காட்சிகளின் காரணமாக மோடிக்கு மக்களின் நம்பிக்கை கிடைக்கவில்லை. எனது பல ஆண்டுகால அர்ப்பணிப்பின் காரணமாக அந்த நம்பிக்கை கிடைத்தது. காங்கிரஸின் வீழ்ச்சி குறித்து ஹார்வேர்டு மட்டுமின்றி அனைத்து பெரிய உலக பல்கலைக்கழகங்களும் ஆய்வு செய்து வருகின்றன." என்றார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications