ஆடிக்கிருத்திகை விழா.. கடவுள் முருகனை நினைத்து தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
டெல்லி: ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடி கடவுள் முருகனை நினைவுக்கூறி தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஆடிக்கிருத்திகை முக்கியமான நாளாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆறுபடை வீடுகளில் விழா
அதன்படி இன்று ஆடிக்கிருத்திகை விழா கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ள தமிழகத்தில் எப்போதும் ஆடிக்கிருத்திகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சவாமிமலை, திருத்தணி, சோலைமலை உள்ளிட்ட ஆறுபடை வீடுகளில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பக்தர்கள் விரத வழிபாடு
இதுதவிர தமிழகத்தில் உள்ள பிற முருகன் கோவில்களில் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றி முருகனை வழிப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

கந்த சஷ்டி பாராயணம்
இந்த நாளில் விரதம் கடைப்பபிடித்தால் எண்ணிய செயல் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பலர் கஷ்டங்கள் விலகி நல்ல விஷயங்கள் நடக்க வேண்டி ஒருமனதாக முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பாராயணம் செய்யவும் சில கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூக நலத்துடனும், வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்'' என கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications