Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2 லட்சம் நிவாரணம் - தஞ்சாவூர் தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்

Recommended Video

    #BREAKING களிமேடு தேர் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!

    தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று காலை திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    10 அடி உயர தேர்

    10 அடி உயர தேர்

    மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் தொண்ட பல்லக்கு தேரில் அப்பர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த தேரை திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்றனர்.

     பள்ளத்தில் இறங்கிய தேர் சக்கரம்

    பள்ளத்தில் இறங்கிய தேர் சக்கரம்

    தேரில் அலங்கார மின் விளக்குகள் ஒளிர்வதற்காக வேண்டி ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தேரை அப்பர் மடத்திற்கு கொண்டு செல்வதற்காக பக்தர்கள் சாலை வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தேரின் ராட்சத சக்கரம் இறங்கியது. அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது.

    11 பேர் உயிரிழப்பு

    11 பேர் உயிரிழப்பு

    இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்

    தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்

    அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.

    நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

    நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

    இந்த நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "தஞ்சாவூரில் நிகழ்ந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கமான இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்." என அறிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+