கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் இல்லை.. சர்ச்சைக்கு இடையே துருவிய நெட்டிசன்கள்!
டெல்லி: CoWIN தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகள் பற்றிய விவாதம் தீவிரமாக எழுந்துள்ள நிலையில் இது கவனிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக வழங்கப்படும் CoWIN சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில், "ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19ஐ தோற்கடிக்கும்" என்ற மேற்கோளுடன், நீண்ட காலமாக பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது, கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், சமூக ஊடக பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்யும்போது மோடி புகைப்படம் அதில் இடம்பெறவில்லை என சமூக ஊடக பயனாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஸெனிகா தெரிவித்த நிலையில் அது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பலர் இந்த புகைப்பட நீக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அனைத்து அரசாங்க இணையதளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே, தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, 5 மாநில மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது குறிப்பிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்ட CoWIN சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நடேந்திர மோடி புகைப்படம் முன்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, "தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் செய்தியுடன் புகைப்படம், தடுப்பூசிக்குப் பிறகும் கோவிட் -19 பாதுகாப்பு வழிமுறைகளாஇப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செய்தியை வலுப்படுத்துகிறது" என்று அப்போதைய சுகாதார அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications