ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள்.. புதினிடமே பிரச்சனை சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: ரஷ்யாவின் ராணுவத்தில் இணைந்த இந்தியர்களை இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். மேலும் இதுபோன்று ராணுவ வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விஷயங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.அதேநேரம் ரஷ்ய அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுவது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார்
ரஷ்யாவில் ஆசை வார்த்தை கூறி இந்தியர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அப்படி சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் குடும்பங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள. தங்கள் உறவினர்களை திரும்பக் கொண்டு வர மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 127 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாகவும், அவர்களில் 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், 12 பேர் இன்னும் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுடிருக்கிறது.

வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்ததகவலின் படி, பல இந்தியக் குடிமக்கள் ரஷ்யாவில் சாதாரண வேலை அல்லது கவர்ச்சிகரமான வேலைகள் என்று நம்பி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள். மாறாக, ரஷ்யாவை அடைந்த உடனேயே பலர் தவறாக வழிநடத்தப்பட்டு, ராணுவச் சேவைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளத. சிலர் மாணவர் விசா அல்லது சுற்றுலா விசாக்களில் சென்றுள்ளார்கள். , ஆனால் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ராணுவச் சேவை ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த நவம்பரில், குறைந்தது 44 இந்தியர்கள் தற்போது ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த நபர்களை விடுவிக்க வலியுறுத்தியும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆட்சேர்ப்பு சலுகைகளை ஏற்க வேண்டாம் என்று குடிமக்களை எச்சரித்தும், ரஷ்ய அதிகாரிகளிடம் அரசாங்கம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது என்றார்.
இதுபற்றி வெளியுறவுத்துறை அதிகாரி ஜெய்ஸ்வால் கூறுகையில், "கடந்த சில மாதங்களில், ரஷ்ய ராணுவத்தில் பல இந்தியக் குடிமக்கள் சேர்ந்துள்ளனர் என்பது எங்களுக்கு தெரியவந்தள்ளத. இவர்களை விரைவில் விடுவிக்கவும், இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரவும் நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை இந்த விஷயத்தை எடுத்துச் சென்றுள்ளோம்.
எங்களுக்கு வந்த தகவலின் படி, தற்போது 44 இந்தியக் குடிமக்கள் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். நாங்கள் ரஷ்யத் தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த நபர்களின் குடும்பங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம், அவர்களுக்கு இதுகுறித்த தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற முன்வரும் சலுகைகளிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளளோம். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சலுகை." என்றார்.
இதனிடையே ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் அரசமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதுபற்றி சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மிஸ்ரி, ரஷ்ய அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுவது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார் .
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விரைவாக விடுவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்ந்து எடுத்து வருகிறோம். ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்காக தரப்படும் எந்தவொரு சலுகைகளையும் நமது மக்கள் மிகவும் கவனமாகத் தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். அங்குப் பலர் சிக்கித் தவிப்பதையும், மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதையும் நாங்கள் பார்த்து வருகிறோம். நான் கூறியது போல், அந்த முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
இந்தியா இப்போது முதல்முறையாக ரஷ்யாவிற்கு குழு சுற்றுலா விசாவையும் இலவசமாக வழங்குகிறது . இந்தியா 30 நாட்கள் மின்னணு சுற்றுலா விசாவை ரஷ்ய குடிமக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இது பரஸ்பரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், முதல்முறையாக குழு சுற்றுலா விசாக்களைப் பற்றியும் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளோம்" இவ்வாறு கூறினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications