'படித்த பிரதமர் அவசியம்' மோடியால் புரிந்து கொள்ள முடியாது.. சிறையில் இருந்தபடி மணிஷ் சிசோடியா கடிதம்
டெல்லி: குறைவான கல்வி தொகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டிற்கு ஆபத்தானது என்று டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மணிஷ் சிசோடியா, சிறையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு என்ற பெயரில் எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்த விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.
பிரதமர் மோடியின் குறைந்த கல்வித்தகுதி தேசத்திற்கு ஆபத்தானது என்று டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா எழுதிய கடிதத்தில் பரபரப்பு விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.

பிரதமர் மோடியின் குறைந்த கல்வித்தகுதி தேசத்திற்கு ஆபத்தானது என்று டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா எழுதிய கடிதத்தில் பரபரப்பு விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.
மோடிக்கு அறிவியல் புரியவில்லை
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. அதன்பிறகு பல்வேற் கட்ட விசாரணைகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றக் காவலில் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மணிஷ் சிசோடியா நாட்டு மக்கள் என்ற முகவரியிட்டு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில் மணிஷ் சிசோடியா, பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கடுமையாக சாடியிருக்கிறார். மணிஷ்சிசோடியா கைப்பட எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியா அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இன்றைய இளைஞர்கள் பெரும் லட்சியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த உலகை வெல்ல இளைஞர்கள் விரும்புகிறார்கள். அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அதிசயங்களை செய்ய விரும்புகிறார்கள். குறைந்த கல்வியறிவு பெற்ற பிரதமரால், இளைஞர்களின் லட்சிய கனவுகளை நிறைவேற்ற முடியுமா? அறிவியலும் விஞ்ஞானமும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்து உலகம் பேசி வருகிறது. பிரதமர் மோடிக்கு அறிவியலும் புரியவில்லை.
படித்த பிரதமர் அவசியம்
விஞ்ஞானமும் புரியவில்லை. கல்வியின் முக்கியத்துவமும் அவருக்கு புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிரதமரின் கல்வி அறிவு குறைவாக இருப்பது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவின் முன்னேற்ற படித்த பிரதமர் அவசியம். நான் படிக்கவில்லை என்று பிரதமர் பெருமையுடன் பேசும் வீடியோவை நான் பார்த்தேன். நான் கிரமத்து பள்ளியில் படித்ததாக பிரதமர் கூறுகிறார். படிக்காமல் இருப்பதோ..குறைந்த கல்வி தகுதி கொண்டு இருப்பதோ பெருமைக்கு உரிய விஷயமா? குறைந்த கல்வி தகுதியை பெருமையாக பேசும் பிரதமரை கொண்ட நாடு, தனது குழந்தைகளுக்கு ஒருபோதும் நல்ல கல்வியை வழங்காது" என்று கூறியுள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலும் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை கேட்டு கெஜ்ரிவால் விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்து இருந்தது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணிஷ் சிசோடியாவின் இந்தக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications