டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது ஒரு மெசேஜ்.. சீனாவை பின்பற்ற முடிவு?.. மோடியின் திடீர் டிவிட்டிற்கு பின் இப்படி ஒரு திட்டமா?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களை விட்டு செல்வதாக அறிவித்ததற்கு பின் முக்கியமான மெசேஜ் ஒன்று இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு பின் மத்திய பாஜக அரசு பல திட்டங்களை வைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    #NoModiNoTwitter goes viral After Modi's Cryptic Announcement to Quit Social Media

    சமூக வலைதளத்தில் பாஜக கட்சி மிகவும் வலிமையாக இருக்கிறது. பாஜகவின் சமூக வலைதள அணிதான் தேசிய கட்சிகளில் மிகவும் வலிமையான அணியாகும். இவர்களை எல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நேற்று பிரதமர் மோடி டிவிட் ஒன்று செய்தார்.

    அதில், வரும் ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதற்கு யோசித்து வருவதாக பிரதமர் மோடி நேற்று ஒரு ட்வீட்டர் பதிவு வெளியிட்டிருந்தார். அவரின் இந்த டிவிட்டர் பதிவு பெரிய வைரலாகி உள்ளது.

    நீங்க இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை.. நாங்களும் போறோம்.. வைரலாகும் நோ மோடி நோ டிவிட்டர்!நீங்க இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை.. நாங்களும் போறோம்.. வைரலாகும் நோ மோடி நோ டிவிட்டர்!

    மோடி எப்படி

    மோடி எப்படி

    பிரதமர் மோடியின் இந்த டிவிட்டிற்கு பின் மொத்த சமூக வலைத்தளமும் தலையை பிய்த்துக் கொண்டது. அவர் ஏன் இப்படி டிவிட் செய்தார். அவரின் இந்த முடிவிற்கு பின் காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். மொத்தமாக சமூக வலைத்தளத்தை விட்டு இப்படி மோடி வெளியேற யார் ஐடியா கொடுத்து இருப்பார்கள். இதற்கு பின் மத்திய அரசின் வேறு திட்டம் ஏதாவது இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

    உலகம் முழுக்க டிவிட்டர்

    உலகம் முழுக்க டிவிட்டர்

    உலகம் முழுக்க டிவிட்டர், பேஸ்புக் ஆகியவை சமூக வலைத்தளம், அரட்டை அடிக்க ஏற்ற இடம் என்பதையும் தாண்டி பல்வேறு நல்ல விஷயங்களை கொண்டு இருக்கிறது.அதோடு உலகம் முழுக்க அரசியலில் டுவிட்டரும், பேஸ்புக்கும் அதிக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஆட்சி கவிழவும் தேர்தல் முடிவுகள் மாறவும் சமூக வலைத்தங்கள் முக்கிய காரணம் ஆகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட கடந்த முறை பேஸ்புக் மூலம் முறைகேடு நடந்தது என்று புகார் உள்ளது.

    கட்டுப்பாடு உள்ளது

    கட்டுப்பாடு உள்ளது

    இதனால் உலகில் சில நாடுகளில் சமூக வலைத்தளங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது. உதாரணமாக சீனாவில் நாம் பயன்படுத்தும் கூகுள், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று சமூக வலைத்தங்கள் எதுவும் இருக்காது. அதற்கு பதிலாக அந்நாட்டு அரசு சார்பாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் அரசுக்கு எதிராக பெரிதாக கருத்து தெரிவிக்க முடியாது. தொடர்ந்து மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவார்கள்.

    கட்டுப்பாடு

    கட்டுப்பாடு

    அதோடு சீனாவில் அரசு இத்தனை வருடங்கள் விமர்சங்களை சந்திக்காமல் ஆட்சி செய்யவும். அங்கு ஆட்சி மாறாமல் இருக்கவும் காரணம் இந்த கட்டுப்பாடுதான். அங்கு பேச்சு உரிமை, கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை அவ்வளவாக இல்லை. இன்னொரு பக்கம் ரஷ்யாவிலும் டிவிட்டர் இல்லை. அங்கு பேஸ்புக் இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு பேஸ்புக்கில் அங்கு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது.

    மோடி எப்படி

    மோடி எப்படி

    இப்படி இருக்கும் சூழலில்தான் பிரதமர் மோடி சமூக வலைதங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு பின் மத்திய அரசு பெரிய திட்டங்களை வகுத்து உள்ளனர் என்கிறார்கள். அதாவது சீனா போல மத்திய அரசும் இந்தியாவில் சுயமாக சமூக வலைதங்களை உருவாக்கலாம். அதாவது டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றை தடை செய்து விட்டு மொத்தமாக புதிய சமூக வலைத்தளங்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறீர்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    மேக் இன் இந்தியா மூலம் மத்திய அரசு சார்பாக சமூக வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படலாம். ஆனால் மத்திய அரசு நேரடியாக இப்படி முடிவு எடுத்தால் அது பெரிய சர்ச்சையாக முடியும். இதனால்தான் தற்போது மோடி முதலில் சமூக வலைதளங்களை விட்டு செல்வதாக கூறுகிறார் . அவரை தொடர்ந்து அவரின் தொடர்பாளர்கள், மற்ற பாஜகவினர் செல்வார்கள் . அதன்பின் மொத்தமாக டிவிட்டர், பேஸ்புக்கை மூடுவதாக மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    என்ன மெசேஜ்

    என்ன மெசேஜ்

    மோடியின் டிவிட் மக்களை தயார்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். இது ஒரு சிக்னல் போல. இது ஒரு மெசேஜ் போல என்று பலரும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியா உண்மையில் சமுக வலைதங்களை தடை செய்து, தனக்கென்று சமூக வலைதளங்களை உருவாக்கினால் அது பெரிய சர்ச்சையாகும். ஆனால் அதையும் கூட சமாளிக்க மத்திய பாஜக அரசு கண்டிப்பாக ஏதாவது திட்டங்களை வைத்து இருக்கும் என்கிறார்கள்.இது தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம்.

    English summary
    PM Modi's plan to leave Social Media has major plans like India's own social Media like China's.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X