நீட் வினாத்தாள் கசிவு: யாரும் தப்ப முடியாது! விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.. பிரதமர் மோடி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வினாத்தாள் கசிவு விவகாரங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை விட வேறு ஏதும் முக்கியமில்லை எனவும், வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோர் தப்ப முடியாது என்றும் மோடி பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

PM Modi said Youth Future Is important Neet Paper Leak Culprits Won t Escape

பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- "இளைஞர்களின் எதிர்காலத்தை விட எதுவும் முக்கியம் இல்லை. மாணவர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடரும். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது. வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். வினாத்தாள் கசிவு விவகாரங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வை ரத்து செய்து மறு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது. இந்த தேர்வு விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிக்ளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனினும், இதனை மத்தியில் ஆளும் பாஜக கண்டுகொள்ளவில்லை.

ராஜினாமா செய்ய வேண்டும்

இந்த சூழலில்தான், சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இயக்கமாக உருவெடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நீட் பிரச்சனையை கையில் எடுத்தனர். முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி கூடிய நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை தொடர்ந்து போலீசார், இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியும் இந்த போராட்டத்தை கையில் எடுத்தது. தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. கடந்த சில நாட்களாக இரு அவைகளிலும் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயார் என்று மத்திய அரசு கூறியது.

விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

எனினும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சிக்ள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் குரல் கொடுத்தன. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று தனது எக்ஸ் தளத்தில், இந்த விவகாரம் குறித்து கருத்தை பதிவு செய்துள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மோடி உறுதியளித்துள்ள சூழலிலும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+