2024-ல் வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் மோடி இத்தனை சாதனையா? இத்தனை உயரிய விருதுகளா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனைகள் படைத்துள்ளார். இதுவரையில் பல ஆண்டுகளாக இந்திய பிரதமர்கள் பயணம் மேற்கொள்ளாத கயானா, நைஜீரியா, குவைத் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பிரதமர் மோடி 2024-ல் பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு சாதனை பயணங்கள்:
- பிரதமர் மோடி 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கயானாவுக்கு சென்றார்; 1968-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 56 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் கயானாவுக்கு பயணம் மேற் கொண்டது முதல் முறையாகும்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நைஜீரியா சென்றார் பிரதமர் மோடி. 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியா பயணம் மேற்கொண்டார்.
- 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். 1992-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர், இந்தியப் பிரதமர் உக்ரைன் நாட்டுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக அமைந்தது.
- 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலந்து நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். 45 ஆண்டுகளில் இந்திய பிரதமர் மேற்கொண்ட முதல் போலந்து பயணம்.
- 2024-ம் ஆண்டு ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இந்திய பிரதமர் ஒருவர் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ஆஸ்திரியாவுக்கு சென்றார்.
- புருனே தாருஸ்ஸலாம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி. இந்தியா- புருனே நாடுகளிடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தப் பயணம் அமைந்தது.
- பிரதமர் மோடி அண்மையில் குவைத் பயணம் மேற்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமரின் முதலாவது குவைத் பயணம்.
பிரதமர் மோடிக்கான வெளிநாடுகளின் உயரிய விருதுகள்
- பூடான் பயணத்தின்போது, இந்தியப் பிரதமருக்கு, அந்நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ' வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலன் விருது 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட போது இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
- பிரதமர் மோடிக்கு, டொமினிகா நாட்டின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் கயானாவுக்கு பயணம் மேற்கொண்ட போது டொமினிக குடியரசின் அதிபர் ஜனாதிபதி சில்வானி பர்ட்டனால் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
- 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடிக்கு, 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபு அவருக்கு வழங்கினார்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கயானா நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, 'தி ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அந்நாட்டு அதிபர் டாக்டர் இர்பான் அலி வழங்கினார்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் மோடியின் கயானா பயணத்தின் போது பார்படாஸின் கௌரவ ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதற்கான முடிவை பார்படாஸைச் சேர்ந்த எம்மியா அமோர் மோட்லி அறிவித்தார்.
- குவைத் அரசின் 'தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications