ஜி20: மீடியா சென்டருக்கு விசிட் அடித்த பிரதமர் மோடி.. கேள்வி எழுப்ப மைக்குகளை நீட்டிய ஊடகங்கள்!
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி, ஜி 20 மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்த சர்வதேச மீடியா சென்டருக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்களையும் மக்களையும் பார்த்து கைகளை அசைத்தார். சில ஊடகங்கள் கேள்வி எழுப்ப முயன்ற போதும் மோடி அதனை தவிர்த்து விட்டார்.
ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்தக் கூட்டத்தின் இரண்டு நாள் கூட்டம் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஜி 20 டெல்லி மாநாட்டின் இரண்டாம் நாளில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மகாத்மா காந்தியின் சமாதியில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பாரத் மண்டபத்திற்கு தலைவர்கள் வருகை தந்தார்கள். உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடத்தப்படும், அந்த இடத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து தலைவர்களின் ஒருமித்த ஜி 20 பிரகடனம் வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டின் தலைமை பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் நிறைவு உரை நிகழ்த்தினார்.
மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு தலைவர்கள் புறப்பட்ட பிறகு பாரத் மண்டபத்தில் உள்ள மீடியா சென்டருக்கு பிரதமர் மோடி திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமர் மோடியை பார்த்ததும் உற்சாகத்தில் கைகளை அசைத்தனர். பிரதமர் மோடியும் வேகமாக சிரித்தபடியே கைகளை காட்டிகொண்டு நடந்து சென்றார். அப்போது, சில கேள்விகளை எழுப்ப அங்கு நின்ற பத்திரிகையாளர்கள் முயற்சித்தனர். ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து விட்டு சென்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications