மோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    PM modi surprised to actress gul panags son

    டெல்லி: பிரதமர் மோடி சர்ப்பிரைஸ் கொடுப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இப்படித்தான் ஒரு நடிகைக்கு திரில்லிங் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளார் பிரதமர்.

    நடிகை குல்பனாக்குக்கு ஒன்றரை வயதில் பையன் இருக்கிறான். அந்தக் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை குல் பனாக் தனது டிவிட்டரில் போட்டிருந்தார். அந்த வீடியோவில் மடியில் மகன் நிஹாலை வைத்துக் கொண்டிருக்கிறார் குல் பனாக். பின்னர் ஒரு பத்திரிகையை காட்டி அதில் உள்ளது யார் என்று கேட்கிறார்.

     pm modi surprised to actress gul panags son

    குட்டிப் பையனும் மோடி என்று சொல்கிறான். இதைக் கேட்ட குல் பனாக் மரியாதையாக மோடிஜி என்று சொல்ல வேண்டும் என்று கூறி மகனைத் திருத்துகிறார்.

    இதேபோல இன்னொரு பத்திரிகை கவரையும் காட்டி அதிலும் உள்ள மோடிஜியை சுட்டிக் காட்டுகிறான் கரெக்டாக.. இதுதான் நம்ம பிரதமரைக் கவர்ந்து விட்டது.

    இதுகுறித்து குல் பனாக் வெளியிட்டிருந்த டிவிட்டரில், பிரதமரை நிஹால் சரியாக அடையாளம் காட்டுகிறான். எனக்கு பெருமையாக உள்ளது. காலையிலேயே இப்படி நடந்தது சந்தோஷமாக இருக்கிறது என்று கருத்திட்டு அதை பிரதமர் டிவிட்டரிலும் டேக் செய்திருந்தார்.

    இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் இதைப் பார்க்க வந்து விட்டனர். 22,000 லைக்குகளுக்கு மேல் குவிந்து விட்டது. 3000க்கு மேல் ரீடிவட் ஆகியுள்ளது.

    இந்த வீடியோவைப் பார்த்த பிரதமர் மோடியும் ஆச்சரியப்பட்டு பதிலளித்துள்ளார். அவர் போட்ட பதில் டிவீட்டில், அருமை. நிஹாலுக்கு எனது ஆசிர்வாதங்களைச் சொல்லுங்கள். அவனை வாழ்த்துகிறேன். நீங்கள் அவனுக்கு மிகச் சரியான வழிகாட்டியாக இருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

    40 வயதாகும் குல் பனாக்கின் மகன் நிஹால் 2018ம் ஆண்டு பிறந்தான். குல் பனாக் கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சண்டிகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் என்பது நினைவிருக்கலாம். அடுத்த தேர்தலில் பாஜக சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+