நமோ டிவியை பார்த்தீங்களா? எப்படி இருக்கு?.. கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலை பாருங்க!
புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் நமோ டீவி குறித்த கேள்விக்கு ஏபிபி பேட்டியில் பிரதமர் மோடி சுவாரசியமான பதில் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் நமோ டிவி குறித்த கேள்விக்கு ஏபிபி பேட்டியில் பிரதமர் மோடி சுவாரசியமான பதில் அளித்துள்ளார். பாஜகவின் கருத்துக்களை பரப்பும் வகையில் நமோ டிவி தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய திருப்பமாக தற்போது பிரதமர் மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். மோடியின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களை பார்த்தாலே ''10 மீட்டர் இடைவெளிவிட்டு'' செல்லும் மோடி, தற்போது தனியாக பேட்டி அளித்துள்ளார். பல முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு மோடி இந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

நீரவ் மோடி
மோடி தனது பேட்டியில் நாங்கள் நீரவ் மோடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கையால்தான் தற்போது நீரவ் மோடி ஜெயிலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். விரைவில் இதுபோன்ற மோசடியாளர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

சட்டம் என்ன
தேசத்துரோக சட்டத்தை நீக்க போவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்து இருக்கிறது. ஆனால் அதே காங்கிரஸ்தான் அவர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் தேசிய துரோக வழக்குகளை போட்டது. நாம்தான் இந்திய சட்டங்களை காக்க வேண்டும். தேச பாதுகாப்பை சட்டங்களை வைத்து நாம் உறுதி செய்ய வேண்டும்.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

பயம் இல்லை
எனக்கு யார் மீதும் பயம் கிடையாது. எனக்கு கடவுள் மீதும், மக்கள் மீதும் மட்டும்தான் பயம். எனக்கு இந்த நாட்டில் இருக்கும் மக்களுக்கு எதுவும் நடக்க கூடாது என்ற அச்சம் மட்டுமே இருக்கிறது. மக்களை ஏமாற்றும் எல்லோரும் இப்போது அச்சத்தில் இருக்கிறார்கள்.

தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் கட்சியில் யாரும் இதை சிரத்தையாக திட்டமிட்டு செய்யவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எனக்கு பெரிய அளவில் ஏமாற்றம் அளித்துள்ளது. அதில் எதுவுமே இல்லை.

என்ன பேட்டி
புதிதாக வெளியாகி இருக்கும் நமோ டிவி குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி, நான் இன்னும் அந்த சேனலை பார்க்கவில்லை. எனக்கு அதற்கான நேரம் இல்லை. ஆனால் மக்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும், மோடி எப்போதும் ஊழலுக்கு எதிரான ஆள் என்பது, என்று மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications