நாலாபுறமும் போராட்டங்கள்.. தொடர் பதட்டத்தில் அஸ்ஸாம்.. கவுகாத்தி விழாவை ரத்து செய்தார் மோடி!
கவுகாத்தி பயணத்தை திடீரென ரத்து செய்தார் பிரதமர் மோடி
டெல்லி: சுத்தி நாலாபக்கம் அணை கட்டினால்? என்ன செய்வதென்றே தெரியாமல் கவுகாத்தியில் நடக்க போற விழாவினை பிரதமர் மோடி ரத்தே செய்துவிட்டார்!
குடியுரிமை சட்ட மசோதா கொண்டு வந்ததில் இருந்தே நாட்டில் அமைதி இல்லை.. நிம்மதி இல்லை.. எங்கே திரும்பினாலும் போராட்டம்.. ஆர்ப்பாட்டம்!

கட்சிக்காரர்கள் என்றால் கூட பரவாயில்லை.. மொத்த மாணவர்களும் களம் இறங்கி உள்ளனர்.. அவர்களை எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு மாணவனை தொட்டால் ஆயிரம் மாணவர்கள் கொந்தளித்து விடுகிறார்கள்!
என்னதான் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரச்சாரத்தில் வீதியில் இறங்கினாலும், மக்களின் கொதிப்பு முன்னே அவை எடுபடாமல் போய் கொண்டுள்ளன. அசாம் மாநிலம் உட்பட நாடு முழுவதுமே இப்படி எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாகி வருகின்றன.
இதில், கவுகாத்தியில் வரும் 10ம் தேதி இந்திய இளைஞர் விளையாட்டு விழாவும், கண்காட்சி விழாவும் நடக்க உள்ளது.. இந்த விழாவினை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.. மோடி மீது பயங்கர அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதிரி நேரத்தில் அங்கே பயணம் மேற்கொண்டால் அது சரியாக இருக்காது என்று மாநில பாஜக ஏற்கனவே அறிவுறுத்தியும் இருந்தது.
அது மட்டுமல்ல.. பிரதமர் வரும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்ப்பையும்., தெரிவிக்க வேண்டும், அந்த எதிர்ப்பானது, இதற்கு முன்பு இல்லாத ஒரு எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள அமைப்புகள் எல்லாம் சேர்ந்து பக்கா பிளானில் உள்ளதாம்.. இந்த தகவலையும் மாநில பாஜக எடுத்து சொல்லி உள்ளது.
இந்நிலையில்தான் நடக்க போகிற விழாவை பிரதமரே கேன்சல் செய்திருக்கிறார்.. இப்படி இந்த மாநிலத்தில் மட்டும் பிரதமர் ரத்து செய்யும் 2வது நிகழ்ச்சி இதுவாகும் அப்படியென்றால் வரும் 10 ம் தேதி மேற்கு வங்க நிகழ்ச்சிக்கு மட்டுமே பிரதமர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்ப்பின் வலு காரணமாக தான் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சியை பிரதமரே ரத்து செய்துள்ளது மிகப்பெரும் கவனத்தை திருப்பி உள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications