257 நாட்களில்.. 100 கோடி கொரோனா வேக்சின் டோஸ்களை செலுத்தி சாதனை.. பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை
டெல்லி: 257 நாட்களில் 100 கோடி கொரோனா டோஸ்களை செலுத்தி சாதனை புரிந்துள்ளோம், மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 100 டோஸ்கள் கொரோனா வேக்சின் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வேக்சின் செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்றுதான் எட்டியது.
இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல் 29,53,02,676 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த வேக்சின் சாதனை சர்வதேச நாடுகளை வியக்க வைத்துள்ளது. வெறும் 9 மாதங்களில் இந்தியா இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

தொடக்கம்
ஜனவரி மாதம் மிக மெதுவாக தொடங்கிய வேக்சின் விநியோகம் அதன்பின் வேகம் எடுத்து தற்போது தினமும் 40 லட்சத்திற்கும் அதிகமாக வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாட இருக்கிறார். 100 கோடி கொரோனா வேக்சின் டோஸ்கள் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

மோடி உரை
அதில், 257 நாட்களில் 100 கோடி கொரோனா டோஸ்களை செலுத்தி சாதனை புரிந்துள்ளோம், மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. பெரும் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் எப்படி வேக்சின் செலுத்துவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். எப்படி மக்களிடம் வேக்சின் கொண்டு செல்லப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

கேள்விகளுக்கு பதில்
எல்லா கேள்விகளுக்கும் 100 கோடி டோஸ்கள் பதில் அளித்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம். இந்தியாவின் சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது.

உறுதி செய்துள்ளோம்
கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம். இதுதான் புதிய இந்தியா; புதிய இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த பரிசு இது. கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம்.

வேக்சின் மோடி
இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது. அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம். தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவே நடத்தியுள்ளோம், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications