தேர்தலை சந்திக்கும் குஜராத்துக்கு ஜாக்பாட்! ரூ15,670 கோடி திட்டங்கள்- இன்று தொடங்கி வைக்கும் மோடி!
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ரூ15,670 கோடி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையமோ, இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்தது. குஜராத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பின்னரே அம்மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு இன்றும் நாளையும் தேதிகளில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர் மோடியின் பயண விவரம்
இன்று காந்திநகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பாதுகாப்பு கண்காட்சி 2022-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நண்பகல் 12 மணிக்கு அதாலாஜில் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்சலன்சை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.15 மணியளவில் ஜுனாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலை 6 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாடு 2022-ஐ தொடங்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். ராஜ்கோட்டில் இரவு 7.20 மணிக்கு, புதுமையாக கட்டுமான நடைமுறைகளின் கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அக்டோபர் 20-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கேவாடியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.45 மணியளவில் வியாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

காந்திநகரில் பிரதமர்
காந்திநகரில் பாதுகாப்புத்துறை 2022 கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 'பெருமைக்கான பாதை' என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறும் இந்த கண்காட்சி, இதுவரை நடைபெற்ற கண்காட்சியில் மிகப்பெரியதாக இருக்கும். முதன்முறையாக இந்த கண்காட்சியில், வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களின் இந்திய துணை நிறுவனங்கள், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பிரிவுகள், இந்திய நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
இந்த கண்காட்சி இந்திய பாதுகாப்பு உற்பத்தித் திறனை விரிவுப்படுத்துவதற்கான நோக்கத்தையும், அளவையும் வெளிப்படுத்தும். இந்த கண்காட்சியில் இந்தியா அரங்கும், பத்து மாநில அரங்குகளும் இடம்பெறும். கண்காட்சியில் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்ஸ் நிறுவனத் தயாரிப்பான எச்டிடி-40 பயிற்சி விமானத்தை பிரதமர் வெளியிட உள்ளார். இந்த பயிற்சி விமானம் அதிநவீன வசதிகளுடன் விமானிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, தொழில்துறை மற்றும் புத்தொழில் முனைவோர் விண்வெளியில் பாதுகாப்புப் படையினருக்கான புதுமையான தீர்வுகளை காண்பதற்கான மிஷன் டெப்ஃபேசை தொடங்கி வைப்பார். குஜராத்தில் தீசா விமான நிலையத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

ஜூனாகத்தில் பிரதமர்
ஜூனாகத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 13 மாவட்டங்களில் 270 கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்கப்படும்.

ராஜ்கோட்டில் பிரதமர்
ராஜ்கோட்டில் சுமார் ரூ.5860 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்திய நகர்ப்புற வீடுகள் 2022 மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் நிறைவடைந்த பின்னர் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications