மோடி தேசப்பாற்றாளரா? அக்னிபாத் பெயரில் ராணுவத்தை பலவீனப்படுத்துவதாக ராகுல்காந்தி கடும் சாடல்
டெல்லி: ‛‛தேசியப்பற்றாளர் என தங்களை அழைத்து கொள்ளும் பாஜகவினர் 'அக்னிபாத்' திட்டத்தின் மூலம் இந்தியாவின் ராணுவத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்'' என ராகுல்காந்தி கூறினார்.
இந்தியா பாதுகாப்பு படைகளில் 4 ஆண்டுகள் பணி செய்யும் வகையில் அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விரைவில் முப்படைகளிலும் ஆள்சேர்ப்பு நடவடிக்கை துவங்க உள்ளது.
இந்த திட்டத்தை கைவிட வேண்டும். முப்படைகளிலும் பழைய ஆள்சேர்ப்பு முறையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து இளைஞர்கள் கூறி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கடந்த சில நாட்களாக பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சில இடங்களில் வன்முறையானது.

இளைஞர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு
இருப்பினும் இத்திட்டத்தை திரும்ப பெறுவதை மத்திய பாஜக அரசு புறம்தள்ளி சில சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரகின்றனர். இந்த திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ராகுல்காந்தி பேசியதாவது:

வேலைவாய்ப்பு இல்லை
"நாட்டின் முதுகெலும்பு என்பது சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான். இது பிரதமர் மோடி அரசால் உடைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பிரச்சனை முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. மேலும் இளைஞர்களுக்கு வேலையை உறுதி செய்ய முடியாத இரண்டு மூன்று தொழிலதிபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஒப்படைத்துள்ளார். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது.

பதவியும் இல்லை- ஓய்வூதியமும் இல்லை
ராணுவத்தில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் பற்றி பாஜக பேசி வந்தது. ஆனால், தற்போது, பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையை கொண்டு வந்துள்ளனர். இளைஞர்கள் கடுமையாக ராணுவத்தில் உழைத்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். 4 ஆண்டுகளுக்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காது. இளைஞர்களுக்கு ஆயுதப் படையில் சேருவதற்கான கடைசி முயற்சியை கூட அவர்கள் மூடிவிட்டனர். இதன்மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியில் சேரும் ஆர்வத்தில் பயிற்சி மேற்கொள்வோரின் முதுகெலும்பையும் பிரதமர் மோடி உடைத்துள்ளார்.

ஒன்றாக எதிர்க்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி உள்பட நாட்டின் ராணுவத்தை வலுவிழக்க செய்து வரும் பாஜகவினர் தங்களை தேசியவாதிகள், தேசப்பற்றாளர் என அடையாளப்படுத்தி கொள்கின்றனர். நாட்டின் வலிமைக்கு உண்மையான நாட்டுப்பற்று தேவை என்பதை நாட்டின் இளைஞர்கள் அறிந்துள்ளனர். இதனால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதை நாம் உறுதி செய்வோம். தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு வலிமையான ராணுவம் தேவை. அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்தின் வலிமையை குறைக்கும். இத்திட்டத்தின் விளைவு என்பது போர் நடக்கும்போது தெரியும். இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இராணுவத்திற்கும் நாட்டுக்கும் மத்திய அரசு செய்யும் துரோகத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

திரும்ப பெற வேண்டும்
விவசாய சட்டங்களை மோடி திரும்பப் பெற வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இதனை பிரதமர் மோடி நிறைவேற்றினார். இப்போது, பிரதமர் மோடி அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதற்காக இளைஞர்கள் அனைவரும் எங்களுடன் நிற்கிறார்கள். உண்மையான தேசப்பக்தி என்பது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதே தவிர, பலவீனப்படுத்துவதில் அல்ல. இதனால் அக்னிபாத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்ப பெற வேண்டும்.
Recommended Video

பொறுமையின் ரகசியம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த விசாரணையின்போது நான் தனியாக இருந்ததாக நினைக்கவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடிய அனைவரும் என்னுடன் இருந்ததாக நினைத்தேன். விசாரணையின்போத என்னுடைய பொறுமையின் ரகசியம் என்னவென்று அதிகாரிகள் கேட்டனர். அதை கூற முடியாது என தெரிவித்தேன். அது என்னவென்று இப்போது சொல்கிறேன். நான் 2004ல் இருந்து காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வருகிறேன். நம் கட்சி தான் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது'' என்றார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications