சிவப்பு கலர் டர்பன்.. அச்சு அசலாக சீக்கியர் போலவே காட்சியளித்த பிரதமர் மோடி -என்ன பேசினார் தெரியுமா?
டெல்லி: 100 சீக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீக்கியர்களைபோல் டர்பன் அணிந்து காட்சியளித்தார்.
சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சட்னம் சிங் சந்து தலைமையிலான 100 சீக்கிய தலைவர்களுடனான சந்திப்பு கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பிரதமர் மோடியுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தார்.

சிவப்பு கலர் டர்பன்
வெவ்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது அந்த மாநில மக்களின் கலாச்சார உடைகளை பிரதமர் நரேந்திர மோடி அணிவது வழக்கம். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அந்தந்த சமயங்களில் டிரெண்டாகிவிடும். அந்த வகையில் இன்று நடைபெற்ற சீக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற டர்பன் அணிந்து கலந்துகொண்டார். வெவ்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது அந்த மாநில மக்களின் கலாச்சார உடைகளை பிரதமர் நரேந்திர மோடி அணிவது வழக்கம். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அந்தந்த சமயங்களில் டிரெண்டாகிவிடும். அந்த வகையில் இன்று நடைபெற்ற சீக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற டர்பன் அணிந்து கலந்துகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சீக்கியர்களுடன் தனக்கு இருக்கும் நெருக்கம் குறித்தும், சீக்கியர்களின் புனித தளங்களான குருத்வாராவுக்கு தான் அடிக்கடி சென்று வருவது குறித்தும் நினைவு கூர்ந்தார். அத்துடன் சீக்கியர்களோடு இணைந்து வாழ்வதே தனது வாழ்க்கை பயணத்தின் ஒரு அங்கம் என்று அவர் தெரிவித்தார்.

தேசத்துக்காக உழைத்தவர்கள் சீக்கியர்கள்
சீக்கிய குருக்கள் தங்களின் முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்து இருக்கின்றனர். தேசத்தை ஒன்றாக்க பாடுபட்டு உள்ளனர். அதற்கான தடங்கள் குஜராத்திலும் பீகாரிலும் உள்ளன. ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்ற கொள்கையோடு வாழ்வது சீக்கியர்களின் பாரம்பரியம். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரத்துக்கு பின்னரும் சீக்கிய சமுதாயம் ஆற்றிய பங்கிற்கு இந்தியா நன்றிக்கடன்பட்டு இருக்கிறது." என்றார்.

சர்வதேச அரங்கில் இந்தியா
ஜாலியன் வாலா பாக்கில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட சீக்கியர்களை நினைவுகூர்ந்த மோடி, மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரும்பணிகளை குறிப்பிடாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது என்றார். "உயர்ந்து வரும் இந்தியாவின் சர்வதேச அந்தஸ்து புலம்பெயந்தவர்களை பெருமை அடைய செய்கிறது. உலகம் அவர்களை அதிக மரியாதையோடு பார்க்கிறது. இதனால் புதிய எல்லைகள் திறக்கப்படுகின்றன.

சீக்கிய என்.ஆர்.ஐ.கள்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற சீக்கியர்களின் பங்களிப்பை போற்றிய பிரதமர் மோடி, சீக்கியர்கள் நாட்டின் எல்லையில் தொடங்கி பொருளாதாரம் வரை இந்தியாவுக்கு பங்களித்து வருகின்றனர். நம்பிக்கைக்கும் கடின உழைப்பும் சொந்தக்காரர்கள் சீக்கியர்கள். மற்ற நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேற்கொள்வதற்கு சீக்கியர்கள் வலுவான இணைப்பாக இருக்கின்றனர்." என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications