பிரதமர் மோடி பிறந்த நாள் .. இன்னைக்காவது லீவு விடலாம்ல..வெளுத்த காங்.- என்ன 'வாழ்த்து' தெரியுமா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களோ இன்றும் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி தொடங்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை மாநில முதல்வர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்த நாளில் நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பேரணியை பாஜக நடத்துகிறது. இந்த பேரணி மூலம் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய இருக்கிறது பாஜக.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நலன் விரும்பும் மாபெரும் தலைவர், சர்வதேசம் போற்றும் சமூக நீதி காவலர், புதிய இந்தியாவின் சிற்பி, பாரத அன்னையின் தவப்புதல்வன் "பார் போற்றும் உன்னத தலைவர்" பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக பணிவு மிகுந்த பிந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் சம வாய்ப்பு நாட்டின் வளர்ச்சியையே தன் இதய துடிப்பாக கொண்டிருக்கும் உன்னதத் தலைவர்..! ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டுக்கு மட்டும் பிரதமராக இல்லாமல் உலக தலைவர்கள் போற்றும் அகிம்சை வழி தலைவராக பாரதத்தாய் கண்ட வலிமை மிக்க பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து, பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களில் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி எம்.பி கருத்து தெரிவிக்கையில், இந்த முறை பிரதமராக தமது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மோடி. அடுத்த முறை முன்னாள் பிரதமராக தமது பிறந்த நாளை கொண்டாடுவார் மோடி என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜ்யசபா எம்பியான கபில் சிபலோ, பிரதமர் மோடி அவர்களே! இன்று முதல் நீங்க சனாதனியாகிடுங்க என சாடியிருக்கிறார்.
இன்றைக்கு ஒரு நாள் லீவு விட்டு அட்டாக் பண்ணலாமே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications