மோடியின் வானொலி உரையில் சந்திரயான் கவிதை எல்லாம் ஓகே.. பிரக்ஞானந்தா பற்றி ஒற்றை வரி கூட இல்லையே?
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய மன்கிபாத்- மனதின் குரல் வானொலி உரையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கவிதை வாசித்தார்; ஆனால் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகக் கோப்பை செஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரர் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் மோதி மிரளவைத்த தமிழ்நாட்டு சிறுவன் "இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா" பற்றி ஒரு வரி கூட குறிப்பிடவில்லையே என்கிற ஆதங்கம் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று மனதின் குரல் எனும் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையில்,

வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
திடமான உறுதியோடு
அனைத்திடர்களையும் தாண்டி
கரும் இருளை அழித்தொழிக்க
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது
என்று நிலவின் தென் துருவம் அருகே இந்தியாவின் சந்திரயா-3 விண்கலம் தரை இறக்கப்பட்டதை பெருமிதத்துடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் "ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாக ஆகி இருக்கிறது" என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.
சந்திரயான் - 3 நிலவில் சரித்திரம் படைத்த அதே நாளில்தான் அஜர்பைஜானில் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஒரு இந்திய சிறுவன், உலகின் முதல் நிலை வீரருடன் மோதி சமன் செய்து டை பிரேக்கர் சுற்றில்தான் வெற்றியை நழுவ விட்டார். தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தாவை உலகமே போற்றிப் பாராட்டி மெச்சுகிறது.
ஆனால் பிரதமர் மோடி, நாட்டின் எத்தனையோ விளையாட்டு வீரர்களை தமது வானொலி உரையில் குறிப்பிட்ட போது, தமிழ்நாட்டு பிரக்ஞானந்தாவை சொல்லாமல் விட்டது ஆதங்கத்தைத் தருகிறது என்கின்றன சமூக வலைதளப் பதிவுகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications