இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின் போது ஈரான் அதிபர் ரைசிக்கு போன் போட்ட பிரதமர் மோடி- பேசியது என்ன தெரியுமா?
டெல்லி: இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின் போது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் அதிபர் ரைசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, அப்பகுதிகளில் பதற்றத்தைத் தணிப்பது, மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது, அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தது நினைவுகூரத்தக்கது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துவிட்டார். ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2021-ல் மோடி வாழ்த்து செய்தி: 2021-ம் ஆண்டு ஈரானின் புதிய அதிபரானார் இப்ராஹிம் ரைசி (இப்ரஹிம் ரெய்சி). அப்போது பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியை ரைசிக்கு அனுப்பி இருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள இப்ரஹிம் ரெய்சிக்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்திருந்தார்.
ரைசியுடன் மோடி சந்திப்பு: இதன் பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய அரசு தரப்பு தெரிவிக்கையில், வர்த்தகம், முதலீடு, இணைப்பு, எரிசக்தி, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சபாஹர் திட்டம் உட்பட உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை விரைந்து நடைமுறைப்படுத்த இருதரப்பும் ஒப்புகொண்டன. ஆப்கானிஸ்தான் உட்பட பிராந்திய விஷயங்கள் குறித்த கருத்துக்களை இருதலைவர்களும் பகிர்ந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்திரயானுக்கு வாழ்த்து சொன்ன ரைசி: மேலும் பிரிக்ஸ் குடும்பத்தில் சேர்வதற்காக ஈரான் அதிபர் ரைசியைப் பிரதமர் பாராட்டினார். அதேபோல சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதற்கு அதிபர் ரைசி, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரிக்ஸ் உறுப்பு நாடாக ஈரான் சேர இந்தியா ஆதரவு அளித்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார் அதிபர் ரைசி.
மோடி- ரைசி தொலைபேசி உரையாடல்: இதன் பின்னர் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்த காலத்தில் உலக நாடுகள் அணிகளாகப் பிரிந்தன. ஹமாஸ் பக்கம் ஈரான் நின்றது. அதே தருணத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ரைசியுடன் மோடி பேசியது என்ன?: இந்த தொலைபேசி உரையாடலின் போது, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாத சம்பவங்கள், வன்முறைகள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். பதற்றத்தைத் தணிப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது, அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பது ஆகியவற்றின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர். இது தொடர்பாக இருதரப்பும் தொடர்பில் இருப்போம் எனவும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொலைபேசி உரையாடல்தான் பிரதமர் மோடி- ஈரான் அதிபர் ரைசி இடையே நிகழ்ந்த இறுதியானதாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும்












Click it and Unblock the Notifications