தாய்லாந்து புதிய பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாகரீகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான இந்தியா - தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன் என பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் ஸ்ரேத்தா தவிசின். அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் ஸ்ரேதத்தா தவிசின்.

thailand narendra modi

இதனையடுத்து தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதாகும் பெடோங்டர்ன் ஷினவத்ரா, ஆளும் கட்சி எம்பிக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவரத்தின் மகள்தான் பெடோங்டர்ன் ஷினவத்ரா. தாய்லாந்து நாட்டின் 2-வது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக பெடோங்டர்ன் ஷினவத்ராவின் அத்தை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்திருந்தார்.

தக்சின் ஷினாவரத், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாய்லாந்து பிரதமராக இருந்தார். அப்போது தக்சின் ஷினாவரத் ஆட்சியை ராணுவம் கலைத்து அவரது கட்சிக்கும் தடை விதித்தது. இதனையடுத்து தாய்லாந்து நாட்டை விட்டு தக்சின் தப்பி ஓடினார். அத்துடன் தாய்லாந்தில் புதிய அரசியல் கட்சியையும் தொடங்கி செல்வாக்கு செலுத்தினார். வெளிநாட்டில் இருந்தபடியே தாய்லாந்து அரசியலில் செல்வாக்கு செலுத்தியதால் 2011-ம் ஆண்டு தேர்தலில் தனது சகோதரியான யிங்லக் ஷினாவரத்தை பிரதமராக்கினார். ஆனால் 2014-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் யிங்லக் பிரதமர் பதவியை பறிகொடுத்தார். இதனையடுத்து 2023-ம் ஆண்டு தேர்தலிலும் தக்சின் ஷினாவரத் கட்சி வென்று ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் பிரதமராக இருந்த ஸ்ரேதத்தா தவிசின், நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

thailand narendra modi

இதனால் ஆளும் கட்சி எம்பிக்களால் பெடோங்டர்ன் ஷினவத்ரா வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய்லாந்தின் புதிய பிரதமரான பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், தாய்லாந்து பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @ingshin. வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துகள். நாகரீகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான இந்தியா - தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+