குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 26) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், வீரதீரம், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனைகளைப் படைத்த 20 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் பெற்றவர்களை வாழ்த்தினார். மேலும் விருது பெற்ற குழந்தைகள் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றார். இந்த விருதுகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர்களின் ஊக்கத்திற்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படும் வீர் பால் திவாஸின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து இந்தியர்களாலும் போற்றப்படும் பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் ஜி மற்றும் அவரது நான்கு மகன்கள் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி உச்சபட்ச தியாகங்களை செய்ததை நினைவுகூர்ந்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications