ராகுல் காந்தி செல்வாக்கு அதிகரிக்கிறது.. மோடி நிலைமை என்ன? இந்தியா டுடே அதிரடி சர்வே
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் உற்சாகமாக உள்ளன. கூட்டணி தயவில் தான் பாஜக ஆட்சியில் உள்ளது. அதேநேரம் இன்று தேர்தல் நடந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவிதியில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் ஆனால் காங்கிரஸ் 100 இடங்களைக் கடக்கும் என்று இந்தியா டுடேயின் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் ஆகஸ்ட் 2024 என்ற பெயரில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சிவோட்டர் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் 40,591 பேர் பதில் அளித்துள்ளனர். இதுதவிர சிவோட்டர் நடத்தும் வழக்கமான வாராந்திர கணிப்பில் 95,872 பேர் பதில் அளித்திருந்தனர். இவற்றை ஆராய்ந்து மூட் ஆஃப் தி நேஷன் அறிக்கையை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 543 உறுப்பினர்களைக் கொண்ட லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை வென்றது, அதே சமயம் எதிர்கட்சிகள் கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியது. 2024 தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது 99 இடங்களில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளில் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியை காங்கிரஸ் பெற்றது. வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இந்த முறை அமர்ந்துள்ளது.
அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 370 மற்றும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற பெரிய லட்சியங்களைக் கொண்டிருந்த பாஜக , 2019 இல் பெற்ற எண்ணிக்கையை விட 63 இடங்கள் குறைந்து 240 இடங்களில் தான் வென்றது. இதனால் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதம் ஆகிவிட்டது. இந்த சூழலில் இன்றைய தேதிக்கு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா டுடேயின் மூட் ஆஃப் தி நேஷன் (எம்ஓடிஎன்) கருத்துக் கணிப்பு நடத்தியது.
இதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இப்போது உள்ளதைவிட 6 இடங்கள் அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களின் எண்ணிக்கை 299 ஆக இருக்கும் என்று சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான இந்தியா கூட்டணியின் எண்ணிக்கையை பொறுத்தவரை பெரும்பாலும் அப்படியே வைத்திருக்குமாம். இப்போது உள்ளதைவிட ஒரு இடத்தை இழந்து 233 ஆக இருக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த சர்வேயில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையேயான இடைவெளி குறைந்திருக்கிறது. அதாவது அடுத்த பிரதமராக இருப்பதற்கு யார் மிகவும் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமான பிரதமர் என்று தேர்வு செய்துள்ளனர். மறுபுறம், வாக்களித்தவர்களில் 22.4 சதவீதம் பேர் ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் மூட் ஆஃப் தி நேஷன் எடுத்த கணிப்புடன் பார்க்கும் போது, இப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு புள்ளிகள் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் ராகுல் காந்திக்கு எட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது
பொதுத் தேர்தல்கள் இன்று நடந்தால், பாஜக தற்போது உள்ளதைவிட நான்கு இடங்களை அதிகம் பெற்று 244 ஆக உயரும். பாஜகவின் வாக்கு வங்கியும் ஓரளவு அதிகரிக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில் 37.7 சதவீதத்தில் இருந்து 36.56 சதவீதமாக சரிந்துள்ள நிலையில், மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் பாஜகவுக்கு 38 சதவீத கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 43.7 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் தற்போது உற்சாகமாக உள்ள காங்கிரஸ், இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் 106 இடங்களைக் கைப்பற்றுமாம். 2014ல் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவிய காங்கிரஸ், அடுத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, எட்டு இடங்கள் மட்டுமே அதிகம் பெற்று 52 இடங்களில் தான் வென்றது 2024 தேர்தலில் தான் 99 இடங்களில் வென்றுள்ளது. இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 25.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று சர்வேயில் தெரியவந்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் 19.46 சதவீத ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ், 2024 தேர்தலில் 21.20 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
லோக்சபா தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட Mood of the Nation (MOTN) கருத்துக்கணிப்பில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடங்களை பெறாது என்றும் பெரும்பான்மையுடன் வெல்லும் என்று கணித்திருந்தது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களை கைப்பற்றும் என்றும், எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி 166 இடங்களை கைப்பற்றும் என்று சர்வேயில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த கணிப்பை தாண்டி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வென்றது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications