மாஸ்டர் பிளான்.. பிரதமர் மோடி திடீர் மீட்டிங்.. தமிழ்நாடு உள்பட 48 தென்னிந்திய எம்பிக்கள் பங்கேற்பு
டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா உள்பட தென்மாநிலங்களைச் சேர்ந்த 48 எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளதால் ஆளும் கட்சியான பாஜக தனது கூட்டணி கட்சியை பலப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்க இந்த முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அவ்வப்போது ஆலோசித்து வருகிறது. பிரச்சாரங்கள், வெற்றிக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 48 எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று ஆலோசனை நடத்தியாக தகவல் வந்துள்ளது எனறு ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சரியான தகவலகள் வெளியாகவில்லை.
அதேநேரம் பல்வேறு தொகுதி எம்பிக்கள் தங்கள் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள், தங்கள் மாநிலத்தின் முக்கியமான பிரச்சனைகள் மற்றும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசியிருக்கலாம் என்று யூகங்களான சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கள்கிழமை மேற்கு உத்தரப் பிரதேசம், புந்தேல்கண்ட் மற்றும் பிரிஜ் பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுக்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதேபோல் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூ ட்டணி எம்.பி.க்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களின் தேர்தல் வியூகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக குழுக்கள் பாஜக குழுக்களை உருவாக்கி உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications