அத்வானி உள்ளிட்டோருக்கு ஆப்பு வைத்த ‘75 வயது’ லிமிட்.. மோடி பதவிக்கு மேலே தொங்கும் கத்தியா?
டெல்லி: பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட பல பாஜக பெருந்தலைகளை ஓரம்கட்டி 'முதியோர்’ குழுவில் சேர்க்க காரணமான 75 வயது என்கிற வரம்பு தற்போது பிரதமர் மோடி பதவிக்கு மேலே தொங்கும் கத்திதான் என திட்டவட்டமாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக 1980களில் பிறப்பெடுத்ததுதான் பாஜக. வாஜ்பாயும் அத்வானியும்தான் பாஜகவின் நிறுவனத் தலைவர்கள். பாஜகவின் முகங்களாக இருந்தவர்கள்தான் இருவரும். முதன் முதலில் பாஜகவை சேர்ந்த ஒருவரை பிரதமராக்கியதும் இந்த இரட்டை குழல் துப்பாக்கிகள்தான். வாஜ்பாய் பிரதமராக, அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தனர்.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் எல்லாமே பாஜகவில் தலைகீழாகிவிட்டது. பாஜகவின் முதுபெரும் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 2014-ம் ஆண்டு தேர்தலில் கடைசியாகப் போட்டியிட்டனர். அப்போது அத்வானிக்கு 86 வயது; முரளி மனோக ஜோஷிக்கு 70 வயது; சுமித்ரா மகாஜனுக்கு 71 வயது.
மோடி- அமித்ஷா: 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். பிரதமராகவும் மோடி பதவி ஏற்றார். அவரது வலது கரமாக உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியேற்றார். பாஜகவில் மோடி- அமித்ஷா இணையர் ஆட்டம் தொடங்கியதும் முதுபெரும் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்தவர்கள் பாஜகவில் முதியோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்குள் துரத்திவிடப்பட்டனர். இதன் பின்னர் பாஜகவின் சட்ட திட்டத்தில் இடம் பெறாத- எழுதப்படாத ஒரு விதியாக 75 வயதை கடந்தவர்களுக்கு கட்சி, ஆட்சியில் பதவி கிடையாது என்பது நடைமுறைக்கு வரத் தொடங்கியது.
மத்திய அமைச்சர்கள் பதவி பறிப்பு: மத்திய அமைச்சர் பதவிகளுக்கும் இந்த 75 வயது லிமிட் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. நாடறிந்த பாஜகவின் முகங்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லா 76 வயதை தொடுவதற்கு முந்தைய நாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து 2016-ல் ராஜினாமா செய்தார். 2017-ல் மூத்த பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ராவுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. இன்று வரை இந்த 75 வயது லிமிட் மத்திய அமைச்சர்கள் பலருக்கும் புளியை கரைக்கிற ஒன்றுதான். இப்படி 75 வயதை எட்டிவிட்டதாலேயே ஒதுக்கப்பட்ட சில பாஜக தலைவர்கள் பின்னாளில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
எத்தனை எத்தனை தலைவர்கள்?: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் என பல சீனியர்களுக்கும் போட்டியிட சீட் தரப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் இதனை அமல்படுத்தியது பாஜக. இதனாலேயே 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக சீனியர்கள் 'தேர்தல் அரசியல்’ என்பதில் இருந்து 'சந்நியாசம்’ பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பல உதாரண 'திலகங்கள்’ இருக்கின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் வயதை காரணம் காட்டியே எடியூரப்பா, முதல்வர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கறிவார்கள். வயதை காரணம் காட்டி எங்கே தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்பதற்காக “தீவிர” தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக 'கவுரவமாக’ அறிவித்து தங்களது அரசியல் வாழ்க்கைக்கு தாங்களே முற்றுப்புள்ளி வைத்த பாஜக சீனியர்கள் பட்டியலும் நீளமானது.
ஆப்பு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்: இப்போது பாஜகவின் 75 வயது லிமிட் அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாஜகவுக்கு எதிரான அஸ்திரமாகவே கெஜ்ரிவால் இதனை ஏவிவிட்டுள்ளார். அதாவது பிரதமர் மோடிக்கு 73 வயதாகிறது. தற்போதைய தேர்தலில் மோடி 3-வது முறையாக பிரதமரானாலும் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 75 வயதை எட்டும் போது இயல்பாகவே பிரதமர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. அப்படி மோடி பிரதமர் பதவியை இழந்தால் அடுத்த பிரதமர் அமித்ஷா என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அலறிக் கொண்டிருக்கும் பாஜக: அதாவது பிரதமர் மோடியை முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை எதிர்கொண்டுள்ள பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் வகையில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த பாஜக கூடாரமும் இப்போது அலறிக் கொண்டிருக்கிறது. அய்யய்யோ மோடிதான் 5 ஆண்டுகாலமும் பிரதமர் என்கின்றனர் பாஜக தலைவர்கள். ஆனாலும் நாம் மேலே குறிப்பிட்ட பழிவாங்கப்பட்ட பாஜக தலைவர்களின் பட்டியலைப் போட்டு காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இன்ன பிற “இந்தியா” கூட்டணி கட்சிகளும் பாஜகவை வெளுத்தெடுக்க 75 வயது முதுமைக்கே உரிய தடுமாற்றத்தை அந்த கட்சி லோக்சபா தேர்தல் களத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது!
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications