முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் .. ராகுலின் பழைய வீடியோவை ரிலீஸ் செய்து பிரதமர் மோடி அட்டாக்!
டெல்லி: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விவாதப் பொருளாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதுவும் 400 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிடும் என எச்சரித்திருந்தனர்.

அண்மையில் ரேபரேலி பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல். இந்த அரசியல் சாசனம் ஒழிக்கப்பட்டுவிட்டடால் உங்கள் நில உரிமை, இடஒதுக்கீடு, பொதுத்துறை எல்லாம் இல்லாமல் போய்விடும். நாங்கள் இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்க போராடுகிறோம் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் இதனை பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக தொடர்ந்து மறுத்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இது தொடர்பாக விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், பாஜக நினைத்திருந்தால் 10 ஆண்டுகால ஆட்சியிலேயே இடஒதுக்கீட்டை ஒழித்திருக்க முடியும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிதான் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என வாக்குறுதி தருகிறது. தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஒழித்து மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என பிரசாரம் செய்தது காங்கிரஸ் கட்சிதான் எனவும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
பாஜகவினரின் இந்த விமர்சனத்தையும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தமது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில் ராகுல் காந்தியின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், காங்கிரஸ் தரக் கூடிய வாக்குறுதியை நீங்களும் கேளுங்கள்.. தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் உரிமையை நிராகரிக்கிறது காங்கிரஸ். அதற்கு பதில் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்கிறது. அப்படி எல்லாம் விட்டுவிடமாட்டோம் என பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications