ஒருபக்கம் நபிகள் நாயகம் அவதூறு சர்ச்சை.. மறுபக்கம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அறிவித்து இருக்கிறது.
வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா வராமல் ஜூலை 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கிறார்.

இந்தியா - அமீரக உறவு
இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் சர்வதேச அரங்கில் நல்லுறவை பேணி வருவதுடன் பல ஆண்டுகளாக வர்த்தக தொடர்பை வைத்து இருக்கின்றன. அமெரிக்காவுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரர் இந்தியாதான். 34 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக குறிப்பிட்ட இடைவெளியில் இரு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது வழக்கம்.

2019 அமீரக பயணம்
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்ததால் சுமார் 3 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவில்லை. கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான, 'Order of Zayed' என்ற விருதை வாங்கச் சென்றார். அத்துடன் இந்தியாவின் ரூபே கார்ட் மற்றும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை ஒட்டி தபால் தலைகளை அவர் அமீரகத்தில் வெளியிட்டார்.

மாறிய பயண திட்டம்
அதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்திய அரங்கத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு இருப்பதால் இந்த ஆண்டு இருநாடுகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

அதிருப்தியில் அரபு நாடுகள்
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார். அதுமட்டுமின்றி நபிகள் நாயகம் குறித்து ஆளும் பாஜகவை சேர்ந்த நுபுர் ஷர்மாவும் நவீன் ஜிண்டாலும் அவதூறாக பேசியதற்கு ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. ஐக்கிய அரபு அமீரகமும் இந்திய தூதரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் அமீரக பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications