திடீரென தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. மேடையில் பதறிய அதிகாரிகள்.. என்ன நடந்தது!
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி தமிழ் பெண் ஒருவர் காலை தொட்ட சம்பவத்தின் வீடியோ டிரெண்டாகி வருகிறது. அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் முதன்முறையாக தேசிய படைப்பாளிகள் விருது' வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நாட்டின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், மாறிவரும் காலத்துக்கு ஏற்ப நமது நாடும் மாற வேண்டும் என்று கூறினார். 'டிஜிட்டல் இந்தியா' இயக்கம் ஆன்லைன் படைப்பாளிகளுக்கு ஒரு புதிய உலகத்தை திறந்துவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அதன் காரணமாகவே நீங்கள் இன்று இந்த பாரத மண்டபத்தில் இருக்கிறீர்கள். இங்குதான் ஜி20 மாநாடு ஏற்பாடு நடந்தது. உலகின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான விவாதம் இங்கே தான் நடைபெற்றது. இன்று, இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து உவிவாதிக்க நீங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறீர்கள்..
காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.. புதுமைக்கு ஏற்ப மாற வேண்டியது அந்த நாட்டின் பொறுப்பு..இன்று, பாரத் மண்டபத்தில், அந்தப் பொறுப்பை இந்தியா நிறைவேற்றுகிறது. டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப இந்தியா தன்னை தகவமைத்து கொண்டுள்ளதையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படைப்பாளி ஒருவர் நாட்டை ஸ்வீப் (சுத்தம்) செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேர்தலிலும் நிச்சயம் க்ளீன் ஸ்வீப் வெற்றி கிடைக்கும் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்வில் போட் இணை நிறுவனர் அமன் குப்தாவுக்கு 'செலிபிரிட்டி கிரியேட்டர் ஆஃப் தி இயர் விருதை பிரதமர் மோடி வழங்கினார், மேலும் கவிதாஸ் கிச்சன் 'சிறந்த படைப்பாளர் விருதை'யும், ஆர்ஜே ரவுனக் 'கிரியேட்டிவ் கிரியேட்டர் விருதையும்' வென்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக தனது கைப்பட விருதை வழங்கினார். அப்போது தான் சம்பவம் நடந்தது.

அதாவது டெல்லியில் நடந்த இந்த தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழாவில் சிறந்த கதைசொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த கீர்த்திகா கோவிந்தசாமி விருதை வாங்கும் முன்பு பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கினார். இதையடுத்து பிரதமர் மோடியும் பதிலுக்கு கீர்த்திகா கோவிந்தசாமி காலை தொட்டு வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி எப்போதும் தனது காலில் மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் விழுவதை அனுமதிக்க மாட்டார். சில மாதங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் காலில் விழுந்த போது கூட அவரை கடிந்து கொண்டது நினைவிருக்கும். அதையும் தாண்டி பொதுமக்கள் யாராவது அவரது காலில் விழுந்தால், பதிலுக்கு மோடியும் அவர்கள் காலில் விழுவார். அதுபோன்ற ஒரு சம்பவமே இன்று நடந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications