மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
டெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜனவரி 17ம் தேதி பிறந்த எம்.ஜி.ஆர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-ல் இணைத்துக் கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கால் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கினார். எம்.ஜி.ஆர் 1977-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். 1987ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார் எம்ஜிஆர். மேலும், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார். இந்ந்நிலையில் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அரசியல் தலைவர்களாலும், தொண்டர்களாலும் நினைவுகூரப்பட்டு வருகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எம் ஜிஆரின் பிறந்தநாளான இன்று நாம் அவருடைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து கொண்டாடுவோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளம். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவருடைய திரைப்படங்கள் சமூக நீதியையும், பிறர் துன்பத்தைக் கண்டு விலகாமல் துணை நிற்கும் உணர்வுகளையும் கடத்தின.
அதனால், அவர் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றெடுத்தார். ஒரு தலைவராக, முதல்வராக அவர் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தார். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். லோக்சபா தேர்தலையொட்டி புது கூட்டணி அமைக்கு முயற்சியில் இறங்கியுள்ளது அதிமுக. இந்நிலையில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவுகூர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications