Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்.. இவ்வளவு நன்மைகளா.. பிரதமர் அலுவலகம் சூப்பர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஸ்வகர்மா ஜெயந்தியை ஒட்டி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நன்மைகள், அதற்கு எப்படி விண்ணப்பிபது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆக்ஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையில், "விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளோம்" என்று அறிவித்தார்.

PM Narendra Modi will launch the PM Vishwakarma scheme in Delhi tomorrow: how to apply

PM Vishwakarma என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்த விஸ்வகர்மா திட்டம் 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், , குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்துவதே நோக்கம் ஆகும். மேலும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற உள்ளார்கள்.

மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PM Narendra Modi will launch the PM Vishwakarma scheme in Delhi tomorrow: how to apply

நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளையே பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள், இ சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்யலாம். விண்ணப்பித்தவர்களுக்கு பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+