அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார்!
டெல்லி: வங்கதேசத்தவர்கள் ஊடுருவல் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதனையடுத்து மொய்த்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் கிருஷ்ணநகர் எம்.பியான மொய்த்ரா பங்கேற்றிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடுருவல் பிரச்சினையை கையாளாததற்கும், திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை குற்றம் சாட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

"ஊடுருவல்காரர்கள் பற்றி அவர்கள் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவின் எல்லை ஐந்து படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் நேரடி பொறுப்பு. ஆக தோல்வி யாருடையது?" என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மொய்த்ரா மீது கோட்வாலி காவல் நிலையத்தில் சந்தீப் மஜும்தார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்திருக்கும் நிலையில், மொய்த்ரா வெளிப்படுத்திய "வெறுக்கத்தக்க" மற்றும் " ஆட்சேபனைக்குரிய" கருத்துகள் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலையை பிரதிபலிக்கின்றன என்று பாஜக விமர்சித்திருக்கிறது.
இது குறித்து மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜக தனது 'ட்ரோல் செல்' மூலம் ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதை சமூக ஊடகங்களில் வைரலாக்குகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications