முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலம் தேறி வருகிறார்- விரைவில் நலமடைய தலைவர்கள் பிரார்த்தனை
டெல்லி: டெல்லி மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் விரைவில் முழுமையாக குணமடைய தலைவர்கள் பலரும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
Recommended Video
முன்னாள் பிரதமரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன்சிங்குக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 8.45 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மன்மோகன்சிங் உடல்நலம் தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மன்மோகன்சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டது கவலை தருகிறது. அவர் விரைவில் குணமடைவார். அவர் முழுமையாக குணமடைய ஒட்டுமொத்த இந்தியாவும் பிரார்த்திக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார் தமது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைந்துவிடுவார். பல கோடி இந்தியர்களுடன் இணைந்து மன்மோகன்சிங் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உளிட்டோரும் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய
பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மன்மோகன்சிங் போன்றோரின் சேவை இந்த நாட்டுக்கு அவசியமானது. அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து நலமுடன் திரும்புவார். அவர் உடல்நலம் குணமடைய விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்













Click it and Unblock the Notifications