தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள்! முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எத்தனை மணிக்கு? EC வெளியிட்ட டேட்டா
டெல்லி: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 102 தொகுதிகளில் நடக்கும் தேர்தலில் வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்? எத்தனை மணிக்கு முடியும்? என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் நாடு முழுவதும் பார்த்தோம் என்றால் 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்: 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எப்போது தொடங்கும் எத்தனை மணிக்கு முடியும் என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.
சத்தீஷ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணிக்கு முடிவடைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே வாக்குப்பதிவு வழக்கமாக முடித்துக்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
அருணாசலபிரதேசம் - 2, அசாம் - 5, பீகார் - 4, சத்தீஸ்கர் - 1, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, மிசோரம் -1, நாகலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 39, திரிபுரா - 1, உத்தர பிரதேசம் - 8, உத்தரகாண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் - 1, ஜம்மு காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1, புதுச்சேரி - 1. ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தல்:
வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20
வேட்பு மனு கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனு பரிசீலனை : மார்ச் 28
திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications