Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று அல்லது நாளை.. பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்? ஆளுநருக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால், பொன்முடிக்கு இன்று அல்லது நாளை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொன்முடி எம்எல்ஏ, அமைச்சர் பதவியை இழந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

Ponmudi is likely to be sworn in as a minister by the governor RN Ravi today or tomorrow

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதன்படி, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் ஆளுநர் ஆர் என் ரவியோ, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.

நாளை வரை தான் அவகாசம்: ஆளுநர் இப்படி கூறியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் ஆளுநர் ரவிக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறுகையில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி முடிவெடுக்க நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்.

பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் தனது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை. தண்டனையை நிறுத்தி வைத்து விட்ட பின்னர் எந்த அடிப்படையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்கிறார் ஆளுநர். பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்.

அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் கூற முடியும்? பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என சொல்லும் அதிகாரத்தை ஆளுநர் ரவிக்கு யார்தான் கொடுத்தது? ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை எனில் மாநில அரசு என்னதான் செய்யும்? நாங்கள் ஒன்றும் கண்ணை மூடிக் கொண்டிருக்கவில்லை.

இன்று அல்லது நாளை பதவியேற்கிறார்?: ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை மீறியதாக இருக்கிறது. ஆளுநர் ஆர் என் ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். ஆளுநர் ரவி முடிவெடுக்காவிட்டால் அவரது செயல்பாடுகள் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்க நேரிடும்" என்று காட்டமாக கூறியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டிப்பால் ஆளுநர் ரவி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாவதை தவிர்க்கும் விதமாக, பொன்முடிக்கு இன்று அல்லது நாளை அமைச்சராக பதவிப்பிரமாணத்தை ஆளுநர் செய்து வைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கு கடந்து வந்த பாதை: கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 75 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், "பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்".

தண்டனை நிறுத்தி வைப்பு: மேலும் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+