மலத்தை சேகரிக்க தனி சூட்கேஸ்.. கூடவே சுற்றும் 3 "டூப்" புதின்.. இதுதான் ரஷ்ய அதிபரின் செக்யூரிட்டி
டெல்லி: இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷ்ய அதிபர் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா வருவது இதுவே முதல்முறை. இதனால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ரஷ்ய அதிபர் புதின் இரு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு உச்சபட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இது தவிர புதினுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்தால் நமக்கு தலையே சுற்றிவிடும்.

மல சூட்கேஸ்
புதினுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளில் வினோதமானது இதுதான். இதை ஆங்கிலத்தில் 'Poop Suitcase' என்று அழைக்கிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும்போது, அவருடைய கழிவுகள் ரஷ்ய பாதுகாப்புப் படையினரால் சேகரிக்கப்படுமாம். அது சீல் வைக்கப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மலத்தை வைத்து அவரது உடல்நிலை குறித்துத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதாலே இந்தச் சிறப்பு ஏற்பாடு. இதற்காகவே பாதுகாப்புப் படையில் ஒரு வீரர் இருப்பாராம்.
டூப் புதின்
அதேபோல புதினுக்கு டூப் கூட இருக்கும். ரிஸ்க் அதிகம் உள்ள இடங்களுக்கு புதின் நேரடியாகச் செல்ல மாட்டார். அவருக்குப் பதிலாக இந்த டூப்பை தான் அனுப்புவார். எது ஒர்ஜினல் புதின் எது டூப் என்று கூட தெரியாத அளவுக்கு இது இருக்கும். இதன் மூலம் ஆபத்தான இடங்களுக்கு புதின் செல்வது தவிர்க்கப்படும். புதினுக்கு குறைந்தபட்சம் 3 டூப்கள் இருக்கலாம் என உக்ரைன் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் கிரில் புடானோவ் தெரிவித்தார்.
உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்படும் தலைவராக புதின் இருக்கும் சூழலில் அவரை சுற்றியும் எப்போதும் காவலர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவரது காவலர்களில் பெரும்பாலானோர் மத்திய பாதுகாப்புச் சேவை அகாடமியில் பட்டம் பெற்றவர்கள். மேலும், அதற்காகப் பல்வேறு தேர்வுகளையும் அவர்கள் பாஸ் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த வேலைக்கு வர வேண்டும். அவர்களின் உயரம் 5.8-6.2 அடி உயரம், 75-90 கிலோ எடை இருக்க வேண்டும். வெளிநாட்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும், இவர்கள் 35 வயதிலேயே ஓய்வு பெற்றுவிடுவார்கள்.
அசுர பாதுகாப்பு கார்
அடுத்து புதின் பயன்படுத்தும் கார்.. அவர் எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும் கையோடு தனது "அவுரஸ் செனட்" காரை எடுத்துச் சென்றுவிடுவார். இந்த கார் தனி விமானம் மூலம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நாட்டிற்குச் சென்றுவிடும். அவுரஸ் மோட்டார்ஸ் மற்றும் ரஷ்யாவின் நாமி நிறுவனம் இணைந்து வடிவமைத்த இந்த கார் பல்வேறு பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. குண்டுகள் துளைக்காது.. கையெறி குண்டுகள் வீசினாலும் எதுவும் ஆகாது. தீயணைப்பு வசதிகள், எமர்ஜென்சிக்கு ஆக்ஸிஜனும் இருக்கும். மேலும், 4 உருளிப்பட்டைகளும் பஞ்சரானாலும் சில கிமீ வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓடும்.
உணவு ஆய்வகம்
அதேபோல புதின் சாப்பிடும் உணவும் கூட ஒவ்வொரு முறையும் தீவிரமாகச் சோதனை செய்யப்படும். அவரது உணவில் நச்சுத்தன்மை உள்ளதா என சோதனை செய்யத் தனியாக ஒரு டீம் இருக்கும். மேலும், அவருக்கான உணவுகளையும் கூட ஹோட்டல் ஊழியர்களைச் செய்ய மாட்டார்கள். அதற்காகவும் ரஷ்யாவில் இருந்து தனியாக ஒரு டீம் வந்துள்ளது.
புதின் பயணத்திற்கு முன்பே பாதுகாப்புப் படை ஹோட்டலை ஆய்வு செய்து, அனைத்து உணவுப் பொருட்களையும் நீக்கிவிடும். புதினுக்கு சமையச் செய்யும் இடத்தில் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படும். அவரது குழுவிற்குத் தனி லிஃப்ட் வசதி கூட ஏற்படுத்தப்படும். அவரது சமயைல்காரர்களும் கூட ராணுவ பயிற்சி பெற்றவர்களாம்.!












Click it and Unblock the Notifications