"நிர்வாணம்.." பதஞ்சலி ஆன்லைன் யோகா மீட்டிங்கில் திடீரென ஓடிய ஆபாசப் படம்! அலறியடித்த பெண்கள்!
டெல்லி: பதஞ்சலி ஆன்லைன் கூட்டம் ஒன்றில் திடீரென ஆபாச படம் ஒன்று ஓட தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்திய பாரம்பரிய படி இயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல இந்த நிறுவனத்தை நடத்துவதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த நிறுவனத்தின் மூலம் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் யோகா வகுப்புகளும் நடந்து வருகிறது. அப்படி உத்தரகண்ட்டில் நடந்த ஒரு வகுப்பில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகண்ட்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்திலுள்ள பகத்ராபாத் கிராமத்தில் இந்த பதஞ்சலி நிறுவனத்தின் சுகாதார ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பதஞ்சலி மையம் ஆன்லைன் மூலம் யோகா பயிற்சிகளை நடத்தி வருகிறது. தேவைப்படும் யார் வேண்டுமானாலும் இந்த ஆன்லைன் யோகா வகுப்பில் கலந்து கொள்ளலாம். சமீபத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூம் வழியாக நடைபெற்றது.

ஆபாச வீடியோ
இந்த ஆலோசனை கூட்டத்தில் பதஞ்சலி யோகபீட அமைப்பில் இருந்து நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பலரும் கலந்து கொண்டனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து இளைஞர் ஒருவர் கலந்து கொண்டார். மீட்டிங் ஆரம்பித்துக் கொஞ்ச நேரம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. இருப்பினும், கொஞ்ச நேரத்தில் புனேவை சேர்ந்த அந்த இளைஞர் திடீரென ஆபாசப் படம் ஒளிபரப்பிவிட்டுள்ளார்.

அலறிய பெண்கள்
இந்தக் கூட்டத்தில் பல பெண்களும் கூட கலந்து கொண்டுள்ளனர். திடீரென ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் இவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பஹத்ராபாத் காவல் நிலையத்தில், பதஞ்சலி ஹெல்த் ரிசர்ச் சென்டர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

போலீசில் புகார்
ஜூம் தளத்தில் இந்த மீட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அந்த இளைஞர் ஆபாசப் படத்தை அப்லோட் செய்து ஒளிபரப்பியுள்ளார்.. பதஞ்சலி சார்பில் கமல் படோரியா மற்றும் சிவம் வாலியா ஆகியோர் பஹத்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அஜய் சிங் கூறுகையில், "இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி யோக பீடத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கலந்துகொண்ட ஜூம் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.

பெரும் பரபரப்பு
ஆன்லைன் ஜூம் மீட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆபாசப் படத்தை ஓட விட்டவருக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த நபர் யோகா வகுப்பில் கலந்து கொள்ள வந்தவர்தான் என்றும் அவர் எதிர்பாராத விதமாக இப்படிச் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications