Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரணாப் முகர்ஜி பிரதமராகனும் என்று விரும்பினார்.. ஆனால்.. மகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரதமராக விரும்பியதாகவும், ஆனால் அவர் அதை அடைய முடியாது என்பது அவருக்கே தெரியும் என்பதால் எந்தவித ஏமாற்றமும் இன்றி இருந்ததாக அவரது மகளும் எழுத்தாளரான ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜியின் மகளும், எழுத்தாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 2004 ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகு பிரணாப் முகர்ஜிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்ததைப் பற்றி தெரிவித்தார். அவர் பேசியதாவது, "பிரணாப் முகர்ஜி பிரதமராக விரும்பினார், ஆனால் அவர் அதை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரியும், எனவே அவர் ஒருநாள் பிரதமர் ஆகிவிடுவோம் என்ற மாயையில் அவர் இருக்கவில்லை.

Pranab Mukherjee wanted to become Prime Minister - Daughter Sharmista Mukherjee

எந்தவொரு தீவிர அரசியல்வாதியும் பிரதமராக விரும்புவார், ஆனால் அது நான் பிரதமராகிவிடுவேன் என்ற அர்த்தமாகி விடாது. பிரணாப் முகர்ஜி தனது அதிகாரத்திற்கு சவால் விடுப்பார் என்று சோனியா காந்தி கருதி, தனது குடும்பத்தின் நலனைப் பாதுகாத்து, தனது அதிகாரத்திற்கு சவால் விடாத ஒருவரை பிரதமராக நியமித்தார்." என்றார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அரசியலை விட்டு விலகிய முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையின் சிறந்த வாழ்க்கையைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

சோனியா காந்தி தனது தந்தை பிரணாப் முகர்ஜியை பிரதமராக அறிவிக்கவில்லை என்பதற்காக அவர் மீது எந்த கசப்பு உணர்வையும் கொண்டிருக்கவில்லை என்றும், அப்போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங் மீதும் நிச்சயமாக எந்த கசப்பு உணர்வையும் தான் வைத்து இருக்கவில்லை எனவும் கூறினார்.

பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகள், தனிப்பட்ட முறையில் அவர் அறிந்த தகவல்கள் மற்றும் ஆராய்ச்சி மூலம், ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையுடைய அரசியல் வாழ்க்கையில், இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் ரூபா பதிப்பகம் கூறியுள்ளது. சோனியா காந்தியின் நம்பிக்கையைப் பெற முடியாததால் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற பிரணாபின் ஆசை நிறைவேறவில்லை என்றும், நேரு - காந்தி குடும்பத்தைச் சுற்றி தனிமனித வழிபாடு இருப்பதாகவும், ராகுல் காந்தியின் மீது மக்களுக்கு ஈர்ப்பு இல்லை எனவும், அவருக்கு அரசியல் புரிதல் குறித்தும் அவர் விளக்கி இருக்கிறார்.

"இந்திரா காந்திக்குப் பிறகு மக்களின் துடிப்பை மிகவும் துல்லியமாகவும் உணரக்கூடிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி" என்று பிரணாப் முகர்ஜி தனது மகள் ஷர்மிஸ்தாவிடம் கூறியதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பணிவான மனிதர். கேள்விகள் அதிகம் கொண்டவர். ஆனால் இன்னும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையாதவர்" என்று பிரணாப் முகர்ஜி விவரித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+