பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு.. திங்கள் கிழமை தண்டனை.. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இரண்டு முறை தண்டனை வழங்கப்படாமல் அமர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே குறித்தும் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூன்று பேர் குறித்தும் பிரஷாந்த் பூஷன் செய்த டிவிட்தான் இந்த வழக்கிற்கு காரணம். நான்கு முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரஷாந்த் பூஷன் டிவிட் செய்து இருந்தார்.
அதிலும் தலைமை நீதிபதி போட்பே சொகுசு பைக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பிரஷாந்த் பூஷன் விமர்சனம் செய்ததும் சர்ச்சையானது. இதனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் செயல்படுகிறார் என்று அவர் மீது வழக்கு போடப்பட்டது.

வழக்கு போடப்பட்டது
உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் காரசாரமான விவாதங்கள் நடந்தது. இதில் அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆஜரானார். பிரசாந்த் பூஷன் தரப்பில் ராஜீவ் தவான் ஆஜர் ஆனார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் காவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

மன்னிப்பு கேட்க முடியாது
இந்த வழக்கில் முதலில் பிரஷாந்த் பூஷனுக்கு மன்னிப்பு கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று பூஷன் கூறிவிட்டார். இதை அடுத்து பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இவருக்கான தண்டனை வழங்கப்படவில்லை. மன்னிப்பு கேட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வாய்ப்பு அளித்தது.

முடிவில் உறுதி
நீங்கள் ஒருவர் மனதை புண்படுத்தி உள்ளீர்கள்.. அப்படி இருக்கும் போது மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு என்று உச்ச நீதிமன்றம் பூஷனிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் என்ன நடந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக பிரஷாந்த் பூஷன் அறிவித்துவிட்டார். என்னுடைய மனசாட்சிக்கு புறம்பாக செயல்பட முடியாது என்று பிரஷாந்த் பூஷன் அறிவித்துவிட்டார்.இந்த நிலையில் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான தண்டனை என்ன என்று அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

என்ன தண்டனை
இரண்டு முறை இதற்காக உச்ச நீதிமன்றம் கூடியும், தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை. முடிந்த அளவு இந்த வழக்கை தண்டனை இன்றி, மன்னிப்போடு முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் முயன்றது. ஆனால் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்கவே முடியாது என்று மறுத்துவிட்டார்.. இந்த நிலையில் பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டு என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications