"பீகார் தேர்தலில் மோசடி நடந்தது உண்மை தான்! ஆனால்.." உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்
டெல்லி: பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி படுதோல்வியை அடைந்த நிலையில், இது தொடர்பாக அவர் மனம் திறந்துள்ளார். தேர்தலில் மோசடி நடந்தது உண்மை தான் என்ற அவர், இதற்கான ஆதாரம் தன்னிடம் இல்லை என்றாலும் மோசடி நடந்தது வெளிப்படையாகவே தெரிவதாகக் குற்றஞ்சாட்டினார்.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். மறுபுறம் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பீகாரில் தனித்துக் களமிறங்கிய ஜன் சூராஜ் கட்சியும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

பிரசாந்த் கிஷோர்
அக்கட்சி வேட்பாளர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. பல தொகுதிகளில் அவர்கள் டெபாசிட்டை கூட இழந்தனர். இதற்கிடையே பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து ஜன் சூராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தேர்தல்களில் முறைகேடு நடந்தது உண்மை தான் என்று சொன்ன அவர், இருப்பினும் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.
மோசடி
இது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பீகார் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. சில அசைக்க முடியாத சக்திகள் இதன் பின்னால் உள்ளன. மக்களுக்கு அதிகம் தெரியாத கட்சிகள் கூட பல லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூட புகார்கள் எழுந்துள்ளன. என்னிடம் இதற்கான ஆதாரம் இல்லை. ஆனால், பல விஷயங்கள் சரியாக இல்லை. வெளிப்படையாகப் பார்த்தால் ஏதோ தவறு நடந்திருக்கிறது. ஆனால், என்னவென்று தெரியவில்லை" என்றார்.
மேலும் தேர்தல் நடக்கும்போதே என்டிஏ அரசு பல ஆயிரம் பெண் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் அதுவும் தேர்தல் முடிவுகளைப் பெரியளவில் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு நாள் வரை.. பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
ரூ.2 லட்சம் ரொக்கம்
மொத்தமாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் இந்த பத்தாயிரம் முதல் தவணை என்றும் மக்களிடம் சொன்னார்கள். மேலும், என்டிஏவுக்கும் நிதிஷுக்கும் வாக்களித்தால் மட்டுமே மீதிப் பணம் கிடைக்கும் என்று சொன்னார்கள். இதை நம்பி பல லட்சம் பேர் வாக்களித்தனர். பீகார் அல்லது நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் இதுபோல தேர்தலுக்கு முன்பு 50,000 பெண்களுக்கு அரசே நேரடியாகப் பணம் கொடுத்தது இல்லை.
மேலும் தேர்தல் நெருங்கும்போது பலரும் ஜன் சூராஜ் வெல்லாது என நினைத்தனர். எங்களுக்கு வாக்களித்து நாங்கள் வெற்றி பெறாவிட்டால், அது லாலு அரசு மீண்டும் வரக் காரணமாக இருக்கும் என நினைத்தனர். இதனால் எங்களுக்கு வரவேண்டிய பெருவாரியான வாக்குகள் என்டிஏ பக்கம் போனது" என்றார்.
அரசியல் வாழ்க்கை ஓவர்?
பிரசாந்த் கிஷோரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகச் சிலர் சொல்வது குறித்த கேள்விக்கு, "நான் வெற்றி பெற்றபோது கைதட்டியவர்கள் இவர்கள்தான். என் அரசியல் வாழ்க்கை குறித்து முடிவெடுக்க வேண்டியது நான்தான். மீண்டும் வெற்றி பெற்றால், அவர்கள் மீண்டும் கைதட்டுவார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள், நான் எனது செய்கிறேன். என்னை குறை சொல்பவர்கள்தான் என்னைப் பற்றி அதிகம் அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். எனது கதை இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்றார்.
பீகார் தேர்தலில் 243 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோர் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.. வெறும் 2 முதல் 3 சதவீத வாக்குகளையே பிரசாந்த் கிஷோர் கட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications