இதை பாஜகவே எதிர்பார்க்கல.. மோடி காலில் நிதிஷ் குமார்? இது பீகாருக்கே கேவலம்.. பிரசாந்த் கிஷோர் நறுக்
டெல்லி: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதில்லை.. கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே மாநில சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டவர்..

கூட்டணி: கடந்த தேர்தலின்போது, மெஜாரிட்டி பெறாததால், பாஜகவின் தயவை நாடியே, ஆட்சியை பிடித்திருந்தார்.. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் எதையுமே நிதிஷுக்கு பாஜக அப்போது தரவில்லை..
இதையடுத்து கூட்டணியில் விழுந்த விரிசல், நாளடைவில் பிளவை தந்துவிட்டது.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ், இடதுசாரிகளின் தயவுடன் உருவாக்கினார்.. ஆனாலும், அங்கேயும் அதிருப்தி எழுந்து, இந்தியா கூட்டணியிலிருந்தும் விலகி, மறுபடியும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார் நிதிஷ். அத்துடன் ஒருபடிமேலே போய், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற முயலும் அளவுக்கு, நிதிஷ்குமாரின் விசுவாசம் வளர்ந்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
நிதிஷ்குமார்: கடந்த ஏப்ரல் மாதம் பீகாரில் உள்ள நவாதா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்க முயன்றார்.. கால்களில் விழ வந்த நிதிஷ்குமாரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார்... இந்த சம்பவத் தேசிய அளவில் கவனத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில், பாகல்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் உத்தி வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பங்கேற்றிருந்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:
"நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான், இப்போது அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்? என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள்.. அப்போது அவர் வித்தியாசமான மனிதராக திகழ்ந்தார்.. அப்போது அவரது மனசாட்சியை, விற்பனைக்கு வைக்கவில்லை... ஒரு மாநிலத்தின் தலைவராக இருந்தவர்.. அந்தக் காலங்களில் அவர் சுயமரியாதையுடன் இருந்தார். ஆனால்,
பீகார் அவமானம்: ஒரு மாநிலத்தின் தலைவர் என்பவர் மாநிலத்தின் மக்களின் பெருமையாகத் திகழ்பவர். ஆனால் நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் கால்களை தொட்டு, பீகாருக்கே பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.
மோடி மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தன்னுடைய செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார்? மாநிலத்தின் நன்மைக்காக, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தவில்லை. 2025 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுகிறார்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
விமர்சனம்: பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை, கடந்த 2022ம் ஆண்டே, அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக பதிவிட்டிருந்தார்..
அதுமட்டுமல்லாமல், பீகார் முழுவதும் 3,000 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்தார். அந்தவகையில், எப்படியும் வரப்போகும் 2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடப் போகிறார் என்ற கருத்துகள் வட்டமிட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நிதிஷ்குமாரை பகிரங்கமாகவே விமர்சித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.
அதிர்வலை: அதுமட்டுமல்ல, எப்படியும் இந்தியா கூட்டணியில் இணைந்து, பாஜகவுக்கு "செக்" வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், திடீரென பாஜக பக்கம் சாய்ந்ததுடன், பிரதமரின் காலை பிடித்து தன்னுடைய விசுவாசத்தை காட்டும் அளவுக்கு நிதிஷ்குமார் வந்துவிட்டாரே என்ற, தேசிய அளவிலான அதிர்வலை இன்னமும் அரசியல் களத்தில் நிலவி வருகிறதாம்..!!
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications