"ரூ.14,000 கோடி முறைகேடு.." பீகாரில் பாஜக கூட்டணி வென்றது இப்படி தான்.. பிரசாந்த் கிஷோர் பகீர்
பாட்னா: பீகார் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றாலும் கூட அவர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இதற்கிடையே பீகார் தேர்தலில் சுமார் 14,000 கோடி ரூபாய் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இதுபோல நடந்ததில்லை என்றும் அவர் சாடினார்.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 202 தொகுதிகளில் என்டிஏ வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் வெறும் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஆளும்தரப்பு மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உலக வங்கியிடம் இருந்து பெற்ற ரூ.14,000 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக விமர்சித்தார். வளர்ச்சிப் பணிகளுக்காகப் பெறப்பட்ட நிதிச் சலுகைகள் மற்றும் இலவசங்களுக்காகத் திசை திருப்பப்பட்டதாகச் சாடினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, 40,000 கோடி ரூபாய் நிதீஷ் குமார் அரசால் செலவிடப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளை அரசுப் பணத்தின் மூலம் வாங்க இந்தச் செலவு செய்யப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இது மிகப் பெரியளவில் நடந்தது. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 14,000 கோடி ரூபாய்க் கடன் சலுகைகள் மற்றும் இலவசங்களுக்காகத் திசை திருப்பப்பட்டுள்ளது.
மாபெரும் முறைகேடு
பீகாரில் தேர்தல் நடக்கும்போதே பெண்களுக்குத் தலா 10,000 ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. கேட்டால் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்றார்கள். தேர்தல் நடத்தை விதிகள் இருந்தபோதிலும், வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு வரை மக்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருந்தது. நாட்டிலேயே இதுபோல நடப்பது இதுதான் முதல்முறை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களின் வாக்குகளைப் பெற இதுவே போதுமானதாக இருந்தது.
இதுபோல அரசு நிதியைச் செலவிட்டு என்டிஏ கூட்டணி மக்கள் வாக்குகளை வாங்கியது. ஒருவேளை அதைச் செய்யாமல் இருந்திருந்தால் என்டிஏ கூட்டணி அழிந்திருக்கும்.
வாக்குகள் மாறியது
முதியோர் உதவித் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என ஜன் சூராஜ் கட்சி சொன்ன பிறகே இவை எல்லாம் நடந்தது. ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிடும் என்ற அச்சமும் மக்களுக்கு இருந்தது. ஆர்ஜேடி ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக இருந்தது என நான் சொல்லவில்லை. ஆனால், அந்த அச்சம் மக்களிடையே இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என மக்கள் நினைத்தனர்.. இதனால் தான் ஜன் சூராஜ் வாக்காளர்களும் கூட கணிசமானோர் என்டிஏ பக்கம் சாய்ந்தனர். இதுவும் ஒரு காரணம்" என்றார்.
பீகார்
பீகாரில் ஜான் சூராஜ் கட்சி யார் உடனும் கூட்டணி வைக்காமல் தனித்துக் களமிறங்கியது. அக்கட்சி கணிசமான வாக்குகளை வாங்கிய போதிலும், அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி மட்டுமே 5 இடங்களில் வென்றிருந்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications